These are excerpts of specific posts and comments exchanged by Thuglak Online Reader Forum (Thuglak Issue dated 29.3.2012) courtesy by Messrs. Cheenu, Venkat and others.
Cheenu
வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று (பாரதி) பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது. சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி"என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிக்கிறார்கள். அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.'இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினுமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையலியைக் கேட்டுக் கொண்டு தான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்"என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.
திருக்குறளில் பல இடங்களில் வேதநெறி சிறப்பித்துப் பேசப்படுகிறது. வேதத்திலுள்ள பஞ்ச மஹாயக்ஞங்களைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஒம்பல் தலை.
ராஜநீதி தவறினால் கோ-ப்ராம்மணர்களுக்கு க்ஷீணம் உண்டாகும் என்பது ஒரு முக்யமான வைதிகக் கொள்கை. கோ (பசு) வையும், பிராம்மணர்களையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், கோ தருகிற நெய், பால், சாணம் முதலியனதான் யக்ஞ திரவியங்களில் முக்யமானவை;யாகத்தைப் பண்ணுகிற அதிகாரம் பெற்றவர்களோ பிராம்மணர்கள்- என்பதுதான். இதே மாதிரி கோ-பிராம்மணர்களைத் திருவள்ளுவர் குறிப்பிட்டு, அரசின் நீதித் தண்டம் தவறினால், இந்த இருவராலும் கிடைக்கிற லோக உபகாரம் வீணாகிவிடும் என்கிறார். (Contd..)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
'ஷட் கர்ம நிரதர்'என்று பிராம்மணர்களுக்கு உள்ள வைதிகமான பெயரை, அப்படியே மொழிபெயத்து "அறு தொழிலோர்"என்கிறார். அத்யயனம்-அத்யாபனம் (தான் வேதம் ஒதுவது-பிறருக்கும் ஒதுவிப்பது) ; யஜனம்-யாஜனம் (தான் வேள்வி செய்வது-பிறருக்கு வேள்வி செய்விப்பது) :தானம் - ப்ரதிக்ரஹம் (வேள்வியில் தானே தக்ஷிணை தருவது;இம்மாதிரி செலவழிப்பதற்கு வேண்டிய மூலதனத்துக்காகவே பிறத்தியாருக்கு சி¬க்ஷ சொல்லி முடித்தபின் அவர்களிடமிருந்து தக்ஷிணை வாங்கிக் கொள்வது) என்ற ஆறும் தான் பிராம்மணனுக்கு உரிய ஷட்கர்மாக்கள். இது மநுஸ்மிருதியில் சொன்னது. தர்ம சாஸ்திரங்களில் இன்னொன்றான பராசர ஸ்மிருதியில் வேறு தினுசாக ஆறு கர்மாக்களை பிராம்மணனின் நித்யப்படியாக (daily routine -ஆக) சொல்லியிருக்கிறது.
ஸந்த்யா-ஸ்நானம் ஜபோ ஹோமம் தேவதானாம் ச பூஜனம்|
ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட்கர்மாணி தினே தினே|
ஒன்று ஸந்தியாவந்தனம்;அதை ஸ்நானத்தோடு செய்ய வேண்டும். ப்ராம்மணன் பச்சைத் தண்ணீரில் முழுகப் பயப்படவே கூடாது. எப்போது பார்த்தாலும், தினமும் இரண்டு மூன்று வேளையும் ஸ்நானம் செய்யவேண்டும். ப்ராத ஸ்நானம் (விடியற்காலை) , மாத்யான்னிக ஸ்நானம் (பகல்) ஸாயங்கால ஸ்நானம் என்று பண்ண வேண்டும். இப்படி மூன்று வேளையும் ஸ்நானம் பண்ணியே அந்தந்த வேளைக்கான ஸந்தியா வந்தனம், அப்புறம் ஸ்நானம் என்று சொன்னதால், ஸந்தியா வந்தனம் பண்ணிவிட்டுப் பிறகு ஸ்நானம் செய்யவேண்டும் என்று குயுக்தி பண்ணக் கூடாது...
இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் விதண்டாவாதம், மரியாதைக்கு அர்ஹமான (உரிய) விஷயங்களில் கேலிப்பேச்சுக்கு பேசுவதெல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யாள் முடிவாக உபசதேசித்த "ஸோபான பஞ்சக"த்தில் 'துஸ்தர்க்காத் ஸுவிரம்யதாம்'என்று சொல்கிற போது, குதர்க்கமாக, குயுக்தியாக மத விஷயங்களில் அர்த்தம் பண்ணுவதைத்தான் கண்டித்திருக்கிறார். மிகவும் பூஜ்யமான வேதத்தின் விஷயத்தில் இது மிகவும் அவசியம். பவ்யத்தோடு பணிவோடு அதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். வேதாந்த நிர்ணயத்துக்கு நல்ல யுக்திகளை ஒரு பிரமாணமாக ஆசார்யாள் ஒப்புக் கொள்கிறார். குயுக்தி, துஸ்தர்க்கம் (குதர்க்கம்) தான் கூடாது என்கிறார். எந்த அளவுக்குத்தான் மநுஷ்ய அறிவு போக முடியுமோ அந்த எல்லைக்குள்ளேயே அதற்கு அதிகாரம் கொடுத்து வேதத்தை ஆராய்ச்சி பண்ணுவதில் தப்பில்லை. ஆனால், நம் சிற்றறிவுக்கு எல்லையே வகுக்காமல் பூரண அதிகாரம் கொடுப்பதுதான் தப்பு... (Contd..)

ஸ்நானம்-ஸந்த்யா என்றில்லாமல், ஸந்த்யா-ஸ்நானம் என்றதற்குக் காரணம்:பிராம்மணனுக்கு ஸந்த்யா வந்தனம் தான் மற்ற எல்லா அனுஷ்டானங்களைவிட முக்கியமாக இருப்பது. அதனால் அவனுடைய கர்மாவைச் சொல்லும்போது அதற்கே முதலிடம் கொடுத்திருக்கிறது.
ஆறு தொழில்களில் முதலாவது ஸந்த்யா-ஸ்நானம். இரண்டாவது ஜபம் - அநேக மஹாமந்திரங்களை, அவரவர் குலதேவதை இஷ்டதேவதை முதலியவற்றின் மந்திரங்களை ஜபிப்பது. மூன்றாவது ஹோமம், அதாவது யக்ஞம். நாலாவதாக தேவதா பூஜனம் - கந்த, புஷ்ப, தூப, தீப, நிவேதனங்களால் ஈச்வரனை வழிபடுவது. ஐந்தாவதாகச் சொன்ன ஆதித்யம் என்றால் அதிதியை உபசரிப்பது.. அதாவது விருந்தோம்பல். கடைசியில் வைச்வ தேவம். பஞ்சமனும், நாய் முதலான ஜந்துக்களும் உள்பட ஸகலப் பிராணிகளுக்கும் பலி போடுவது வைச்வதேவம்.
இப்படிப் பண்ணுபவர்களைத்தான் 'அறுதொழிலோர்'என்று ரொம்பவும் பெரியவரான வள்ளுவர் சொல்கிறார். கெட்ட ராஜ்யத்தில் பிராம்மணர்கள் வேத அத்யயனம் பண்ண மாட்டார்கள், வேதத்தை மறந்து விடுவார்கள் என்கிறார் - அறு தொழிலோர் நூல் மறப்பர். பிராம்மணர்கள் வேதத்தை மறக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்ட நல்ல ராஜ்யம் ஏற்படவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் ஆசை என்று இதிலிருந்து தெரிகிறது.
தமிழ்த் தெய்வம் என்று சொல்லப்படும் ஸுப்ரமண்ய ஸ்வாமியின் ஆறுமுகங்களை வர்ணிக்கும்போது, சங்க நூலான திருமுருகாற்றுப் படையில், அவருடைய முகங்களில் ஒன்று பிராம்மணர்கள் வேதவிதி தப்பாமல் செய்யும் யக்ஞங்களை ரக்ஷிக்கவே இருக்கிறது என்கிறது.
ஜைன பௌத்த சம்பந்தமே முக்கியமாக உள்ள ஐம்பெரும் காப்பியங்களில்கூட, பல இடங்களில் வேதத்தை, வைதிக தர்மத்தை ரொம்பவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் எங்கே பார்த்தாலும் வர்ணாச்ரம தர்மங்களை எடுத்துச் சொல்லியிருக் கிறது;'அந்தணர் ஒம்பலை' விசேஷித்துச் சொல்லியிருக்கிறது; வேத சப்தம், யக்ஞம் ( ஆரண ஒதையும் செந்தீ வேட்டலும் ) இவற்றைக் கொண்டாடியிருக்கிறது என்று புலவர்கள் சொல்லுகிறார்கள். வைச்யனான கோவலன் அநேக வேத கர்மாநுஷ்டானங்களைப் பண்ணினதற்கு அதிலே குறிப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். (Contd..)
ஸ்நானம்-ஸந்த்யா என்றில்லாமல், ஸந்த்யா-ஸ்நானம் என்றதற்குக் காரணம்:பிராம்மணனுக்கு ஸந்த்யா வந்தனம் தான் மற்ற எல்லா அனுஷ்டானங்களைவிட முக்கியமாக இருப்பது. அதனால் அவனுடைய கர்மாவைச் சொல்லும்போது அதற்கே முதலிடம் கொடுத்திருக்கிறது.
ஆறு தொழில்களில் முதலாவது ஸந்த்யா-ஸ்நானம். இரண்டாவது ஜபம் - அநேக மஹாமந்திரங்களை, அவரவர் குலதேவதை இஷ்டதேவதை முதலியவற்றின் மந்திரங்களை ஜபிப்பது. மூன்றாவது ஹோமம், அதாவது யக்ஞம். நாலாவதாக தேவதா பூஜனம் - கந்த, புஷ்ப, தூப, தீப, நிவேதனங்களால் ஈச்வரனை வழிபடுவது. ஐந்தாவதாகச் சொன்ன ஆதித்யம் என்றால் அதிதியை உபசரிப்பது.. அதாவது விருந்தோம்பல். கடைசியில் வைச்வ தேவம். பஞ்சமனும், நாய் முதலான ஜந்துக்களும் உள்பட ஸகலப் பிராணிகளுக்கும் பலி போடுவது வைச்வதேவம்.
இப்படிப் பண்ணுபவர்களைத்தான் 'அறுதொழிலோர்'என்று ரொம்பவும் பெரியவரான வள்ளுவர் சொல்கிறார். கெட்ட ராஜ்யத்தில் பிராம்மணர்கள் வேத அத்யயனம் பண்ண மாட்டார்கள், வேதத்தை மறந்து விடுவார்கள் என்கிறார் - அறு தொழிலோர் நூல் மறப்பர். பிராம்மணர்கள் வேதத்தை மறக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்ட நல்ல ராஜ்யம் ஏற்படவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் ஆசை என்று இதிலிருந்து தெரிகிறது.
தமிழ்த் தெய்வம் என்று சொல்லப்படும் ஸுப்ரமண்ய ஸ்வாமியின் ஆறுமுகங்களை வர்ணிக்கும்போது, சங்க நூலான திருமுருகாற்றுப் படையில், அவருடைய முகங்களில் ஒன்று பிராம்மணர்கள் வேதவிதி தப்பாமல் செய்யும் யக்ஞங்களை ரக்ஷிக்கவே இருக்கிறது என்கிறது.
ஜைன பௌத்த சம்பந்தமே முக்கியமாக உள்ள ஐம்பெரும் காப்பியங்களில்கூட, பல இடங்களில் வேதத்தை, வைதிக தர்மத்தை ரொம்பவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் எங்கே பார்த்தாலும் வர்ணாச்ரம தர்மங்களை எடுத்துச் சொல்லியிருக்
Cheenu
தமிழ் வார்த்தைகளும், வழக்கிலுள்ள அநேக வசனங்களுமே, இந்த நாட்டின் வைதிக ஈடுபாட்டுக்குப் பெரிய சான்றுகளாக இருக்கின்றன. 'யஜனம், யக்ஞம்' என்பனவற்றுக்கு 'வேட்டல், வேள்வி'என்ற வார்த்தைகள் பிராசீனமாக இருந்து வருகின்றன. 'சயனம்'என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் 'பரப்பு'என்ற வார்த்தை பழங்காலத்திலிருந்து இருக்கிறது. இம்மாதிரி வேறு நாகரிகத்திலிருந்து வந்த விஷயங்களுக்கு, ஒரு பாஷையில் தனிப்பெயர்கள் ஆதிகாலத்திலிருந்து இருக்க முடியாது. இப்போது கிறிஸ்துவ தேசத்திலிருந்து பைபிள் வந்தால், அதற்கு நாம் 'கிறிஸ்துவ வேதம்' என்று பேர் கொடுத்தாலும், வேள்வி மறை என்பவை போல் இந்தப் பேர் வேரூன்றாமல் பைபிள், பைபிள் என்றேதான் சொல்கிறோம். அதுவுமில்லாமல் அதை வேதம் என்கிறபோது, வேதம் என்று ஏற்கெனவே நம்மிடமிருக்கிற மூல சாஸ்திரத்தின் பேரைக் கொண்டுதான் அதற்குப் பேர் வைத்திருக்கிறோம். பைபிளைத் தவிர வேறு வேதம் நமக்கு உண்டு. ஆனால் வேத யக்ஞத்தைத் தவிர வேறே 'வேள்வி'என்று ஒன்று கிடையவே கிடையாது. 'வேள்வி' என்று தமிழிலே பெயர் இருந்தாலும், வைதிக தர்மத்தில் இல்லாததாகத் தமிழ் நாட்டுக்கு என்று மட்டும் வேள்வி என்ற வேறு கர்மா இருக்கவில்லை. இப்படியே 'மறை'என்றால் வேதம்தான். தமிழிலே வேறே மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை.
இந்த 'மறை' என்ற வார்த்தை ரொம்பவும் ஆழமான, பொருத்தமான பொருள்
கொண்டதாகும். வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு 'ரஹஸ்யம்' என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக் கிறது;உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட ரஹஸ்யமான பாகங்களையே தனியாக 'உபநிஷதம்'என்று குறிப்பிட்டிருக்கிறது. வேதியர்கள் தங்களுக்குள்ளயே ஜாக்ரதையுடன், கொஞ்சமும் அம்பலப் படுத்தி விடாமல் மறைவாக ரக்ஷிக்க வேண்டிய சில பாகங்களை மட்டுமே வேத, உபநிஷத்துக்கள் இப்படிச் சொல்கின்றன. தமிழ் இன்னம் ஒரு படி மேலே போய் வேதம் முழுதையும் 'மறை' என்று சொல்லிவிட்டத ு!'மறை'என்றால் மறைத்து ரஹஸ்யமாகக் காப்பாற்றப்பட வேண்டியது என்று அர்த்தம். வேதம் அதிலே அதிகாரம் பெற்றவர்களிடம் மட்டும் பேசிற்று. 'இன்னின்ன பாகங்களை நீங்கள் மறைவாகப் போற்றி வாருங்கள் என்று அதிகாரிகளுக்குச் சொல்லிற்று. (Contd..)
தமிழ் வார்த்தைகளும், வழக்கிலுள்ள அநேக வசனங்களுமே, இந்த நாட்டின் வைதிக ஈடுபாட்டுக்குப் பெரிய சான்றுகளாக இருக்கின்றன. 'யஜனம், யக்ஞம்' என்பனவற்றுக்கு 'வேட்டல், வேள்வி'என்ற வார்த்தைகள் பிராசீனமாக இருந்து வருகின்றன. 'சயனம்'என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் 'பரப்பு'என்ற வார்த்தை பழங்காலத்திலிருந்து இருக்கிறது. இம்மாதிரி வேறு நாகரிகத்திலிருந்து வந்த விஷயங்களுக்கு, ஒரு பாஷையில் தனிப்பெயர்கள் ஆதிகாலத்திலிருந்து இருக்க முடியாது. இப்போது கிறிஸ்துவ தேசத்திலிருந்து பைபிள் வந்தால், அதற்கு நாம் 'கிறிஸ்துவ வேதம்' என்று பேர் கொடுத்தாலும், வேள்வி மறை என்பவை போல் இந்தப் பேர் வேரூன்றாமல் பைபிள், பைபிள் என்றேதான் சொல்கிறோம். அதுவுமில்லாமல் அதை வேதம் என்கிறபோது, வேதம் என்று ஏற்கெனவே நம்மிடமிருக்கிற மூல சாஸ்திரத்தின் பேரைக் கொண்டுதான் அதற்குப் பேர் வைத்திருக்கிறோம். பைபிளைத் தவிர வேறு வேதம் நமக்கு உண்டு. ஆனால் வேத யக்ஞத்தைத் தவிர வேறே 'வேள்வி'என்று ஒன்று கிடையவே கிடையாது. 'வேள்வி' என்று தமிழிலே பெயர் இருந்தாலும், வைதிக தர்மத்தில் இல்லாததாகத் தமிழ் நாட்டுக்கு என்று மட்டும் வேள்வி என்ற வேறு கர்மா இருக்கவில்லை. இப்படியே 'மறை'என்றால் வேதம்தான். தமிழிலே வேறே மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை.
இந்த 'மறை' என்ற வார்த்தை ரொம்பவும் ஆழமான, பொருத்தமான பொருள்
கொண்டதாகும். வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு 'ரஹஸ்யம்' என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக்
Cheenu
தமிழ் பாஷை வேதியர்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஸமஸ்த ஜன சமூகத்தையும் எடுத்துக் கொண்டு பேசும்போது, எப்படி வேதமானது பிராம்மணர்களுக்குள்ளேயே சில பாகங்களை ரஹஸ்யமாக ரட்சிக்க வேணடும் என்கிறதோ, அதே மாதிரி ஸகல வர்ணத்தாரையும் எடுத்துக் கொள்கிறபோது வேதம் முழுதையும் அதில் அதிகாரமுள்ளவர்கள் அதிகாரமில்லா தவர்களிடமிருந்து ரஹஸ்யமாக ரட்சிக்க வேண்டும் என்று கருதியே, முழு வேதத்துக்கும் "மறை" என்று பேர் கொடுத்து விட்டது!அதை எல்லாருக்கும் என்று democratise பண்ணிவிடக்கூடாது என்பதுதான் தமிழ் ஜனங்களின் தொன்று தொட்ட அபிப்ராயம் என்பது "மறை"என்ற இந்த வார்த்தையிலிருந்தே தெரிகிறது.
இன்னொரு விதத்திலும் 'மறை' என்று பெயர் பொருத்தமாயிருக்கிறது. வேதத்தினால் ஏற்படும் பயன் முழுவதும் உடனே தெரிந்து விடாது. ஆத்யாத்மிகமாக அதனால் அடையப்படும் பிரயோஜனங்கள் இப்போது மறைந்திருந்து பிற்பாடுதான் வெளிப்படும். இதனால் வேதமானது 'அதிருஷ்ட பலனை'ச்சொல்வது என்பார்கள். திருஷ்டியில் தெரியாதது தான் அதிருஷ்டம். தெரியாதது என்றால் மறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?எதன் பலன் இப்படி மறைந்திருக்கிறதோ அதை "மறை" என்றே சொல்லி விட்டார்கள்.
நம் மதத்துக்கு வேதம் வேர். பக்தி, கோவில், தியானம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் அது. மூலம் என்றால் வேர் என்றே அர்த்தம். கோவில், பக்தி, பூஜை முதலான மற்றதெல்லாம் வெளியே தெரிகிற அடிமரம், கிளை, பூ, காய், பழம் என்றால் வேதம் வேர். அதனால்தான் அடிமரம் முதலானவை இருக்கின்றன. வளர்கின்றன. ஆனால் வேர் இவற்றைப் போல் வெளியில் தெரியாமல் பூமிக்குள்ளேதான் ஒடிக்கொண்டு மறைவாக இருக்கிறது. இவ் விதத்திலும் மறை என்ற பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.
'ஒத்து'என்றும் வேதத்துக்கு அழகான, அர்த்த புஷ்டியுள்ள தமிழ்ப் பேர் இருக்கிறது. எது எழுதப்படாமல், வாய்மொழியாகவே, அதாவது ஒதப்பட்டே அப்யஸிக்கப் படவேண்டுமோ அதுதான் "ஒத்து". திருக்குறளில் இந்தப் பேர் இருக்கிறது. வடார்க்காடு ஜில்லாவில் திருவோத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஞானஸம்பந்தர் அங்கே ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றினார். திருஒத்து-ஊர் என்பதே திருவோத்தூர் என்பது. வேதங்கள் பரமேச்வரனைப் பூஜை பண்ணின க்ஷேத்ரமாதலால் இப்படி பேர் ஏற்பட்டது. ஸம்ஸ்கிருதத்தில் அதற்கு 'வேதபுரி' என்று பெயர் இருக்கிறது. (Contd..)
தமிழ் பாஷை வேதியர்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஸமஸ்த ஜன சமூகத்தையும் எடுத்துக் கொண்டு பேசும்போது, எப்படி வேதமானது பிராம்மணர்களுக்குள்ளேயே சில பாகங்களை ரஹஸ்யமாக ரட்சிக்க வேணடும் என்கிறதோ, அதே மாதிரி ஸகல வர்ணத்தாரையும் எடுத்துக் கொள்கிறபோது வேதம் முழுதையும் அதில் அதிகாரமுள்ளவர்கள் அதிகாரமில்லா
இன்னொரு விதத்திலும் 'மறை' என்று பெயர் பொருத்தமாயிருக்கிறது. வேதத்தினால் ஏற்படும் பயன் முழுவதும் உடனே தெரிந்து விடாது. ஆத்யாத்மிகமாக அதனால் அடையப்படும் பிரயோஜனங்கள் இப்போது மறைந்திருந்து பிற்பாடுதான் வெளிப்படும். இதனால் வேதமானது 'அதிருஷ்ட பலனை'ச்சொல்வது என்பார்கள். திருஷ்டியில் தெரியாதது தான் அதிருஷ்டம். தெரியாதது என்றால் மறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?எதன் பலன் இப்படி மறைந்திருக்கிறதோ அதை "மறை" என்றே சொல்லி விட்டார்கள்.
நம் மதத்துக்கு வேதம் வேர். பக்தி, கோவில், தியானம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் அது. மூலம் என்றால் வேர் என்றே அர்த்தம். கோவில், பக்தி, பூஜை முதலான மற்றதெல்லாம் வெளியே தெரிகிற அடிமரம், கிளை, பூ, காய், பழம் என்றால் வேதம் வேர். அதனால்தான் அடிமரம் முதலானவை இருக்கின்றன. வளர்கின்றன. ஆனால் வேர் இவற்றைப் போல் வெளியில் தெரியாமல் பூமிக்குள்ளேதான் ஒடிக்கொண்டு மறைவாக இருக்கிறது. இவ் விதத்திலும் மறை என்ற பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.
'ஒத்து'என்றும் வேதத்துக்கு அழகான, அர்த்த புஷ்டியுள்ள தமிழ்ப் பேர் இருக்கிறது. எது எழுதப்படாமல், வாய்மொழியாகவே, அதாவது ஒதப்பட்டே அப்யஸிக்கப் படவேண்டுமோ அதுதான் "ஒத்து". திருக்குறளில் இந்தப் பேர் இருக்கிறது. வடார்க்காடு ஜில்லாவில் திருவோத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஞானஸம்பந்தர் அங்கே ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றினார். திருஒத்து-ஊர் என்பதே திருவோத்தூர் என்பது. வேதங்கள் பரமேச்வரனைப் பூஜை பண்ணின க்ஷேத்ரமாதலால் இப்படி பேர் ஏற்பட்டது. ஸம்ஸ்கிருதத்தில் அதற்கு 'வேதபுரி' என்று பெயர் இருக்கிறது. (Contd..)
Cheenu
மறை, ஒத்து, என்பது போல் "ஆரணம்" என்ற பெயரும் வேதத்துக்கு தமிழ் பாஷையில் இருக்கிறது. "ஆரணன்காண்"என்று அடிக்கடி திருமுறைகளில் வரும். 'வேத வாக்கோ!' என்று கேட்பது, தர்மசாலையை 'சத்திரம்' என்பது, முதலாளியை 'யஜமான்'என்பது, 'ஸாங்கோபாங்கம்'என்பது - இப்படி நடுவே நடுவே நான் சொன்ன ¢நேக விஷயங்களும், வைதிக அநுஷ்டானங்கள் தமிழ் தேசத்தில் எப்படி வேரோடியிருக்கிறது என்று காட்டுகின்றன. எழுதி வைக்காமல் குரு-சிஷ்யன் என்று தலைமுறை தத்துவமாகக் காதால் கேட்டே பாடம் பண்ணப்பட வேண்டிய வேதத்துக்கு 'ச்ருதி'என்று ஸம்ஸ்கிருதத்தில் பேர் இருக்கிறதென்றால், தமிழிலோ 'எழுதாக் கிளவி' என்று இன்னம் அழுத்தமான பேர் இருக்கிறது. 'ச்ருதி என்றால் 'கேட்கப்படுவுது'. இப்படி சொல்வதாலேயே 'எழுதப்படக்க ூடாதது'என்று ஊகித்துக் கொள்ளும்படியாக விட்டு விட்டார்கள்.
ஆனால் தமிழிலோ வேதத்தை எழுதக்கூடாது என்று வெளிப்படையாக தெரியும்படியாக 'எழுதாக் கிளவி' என்று பேர் வைத்திருக்கிறது. வேதம் அதற்குள்ள நியமப் படியே ரக்ஷிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசத்துக்கு அவ்வளவு உறுதியிருந்திருக்கிறது!
இப்போது எந்த மதக் காரியமானாலும் 'சடங்கு' என்றுதானே தமிழில் சொல்கிறோம்?இது நான் இனி மேலே சொல்லப் போகும் "ஷடகங்கள்" என்கிற வேதத்தின் ஆறு அங்கங்களை வைத்தே ஏற்பட்ட பேர்தான்.
வேதங்களுக்குப் பிராணன் மந்திரங்கள் என்றால், அந்த மந்திரங்களுக்குப் பிராணன் அக்ஷர சுத்தம். அதாவது, சரியான உச்சரிப்புத்தானே?இது மாறினால் வெளி ஆகாசத்து சலனம் (vibration) , உள்ளே நாடி சலனம் இரண்டும் மாறிப் பலனே மாறிவிடும் என்று சொன்னேனல்லவா?எந்தெந்த அக்ஷரம் சரீரத்தில் எங்கே யெங்கே பிறந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் ரொம்பவும் scientific- ஆக விஞ்ஞான ரீதியில்) சிக்ஷ£ சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. வெளியிலே மநுஷ்யர் காதுபடக் கேட்கிற 'வைகிரி' என்ற சப்தத்துக்கு ஆதாரமாக உள்ளே 'பரா' என்ற சப்தம் இருக்கிறது. 'வைகிரி' வாயில், உதட்டில் வருவது. 'பரா' என்ற மூல ரூபம்தான் மூலாதாரத்தில் நாபிக்குக் கீழே இருக்கிற சப்தம். அது வைகரியாக வாய் வழியே வருவதற்கு முன் பச்யந்தி, மத்யமா என்ற இரண்டு நிலைகள் இருக்கின்றன. (Contd..)
மறை, ஒத்து, என்பது போல் "ஆரணம்" என்ற பெயரும் வேதத்துக்கு தமிழ் பாஷையில் இருக்கிறது. "ஆரணன்காண்"என்று அடிக்கடி திருமுறைகளில் வரும். 'வேத வாக்கோ!' என்று கேட்பது, தர்மசாலையை 'சத்திரம்' என்பது, முதலாளியை 'யஜமான்'என்பது, 'ஸாங்கோபாங்கம்'என்பது - இப்படி நடுவே நடுவே நான் சொன்ன ¢நேக விஷயங்களும், வைதிக அநுஷ்டானங்கள் தமிழ் தேசத்தில் எப்படி வேரோடியிருக்கிறது என்று காட்டுகின்றன. எழுதி வைக்காமல் குரு-சிஷ்யன் என்று தலைமுறை தத்துவமாகக் காதால் கேட்டே பாடம் பண்ணப்பட வேண்டிய வேதத்துக்கு 'ச்ருதி'என்று ஸம்ஸ்கிருதத்தில் பேர் இருக்கிறதென்றால், தமிழிலோ 'எழுதாக் கிளவி' என்று இன்னம் அழுத்தமான பேர் இருக்கிறது. 'ச்ருதி என்றால் 'கேட்கப்படுவுது'. இப்படி சொல்வதாலேயே 'எழுதப்படக்க
ஆனால் தமிழிலோ வேதத்தை எழுதக்கூடாது என்று வெளிப்படையாக தெரியும்படியாக 'எழுதாக் கிளவி' என்று பேர் வைத்திருக்கிறது. வேதம் அதற்குள்ள நியமப் படியே ரக்ஷிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசத்துக்கு அவ்வளவு உறுதியிருந்திருக்கிறது!
இப்போது எந்த மதக் காரியமானாலும் 'சடங்கு' என்றுதானே தமிழில் சொல்கிறோம்?இது நான் இனி மேலே சொல்லப் போகும் "ஷடகங்கள்" என்கிற வேதத்தின் ஆறு அங்கங்களை வைத்தே ஏற்பட்ட பேர்தான்.
வேதங்களுக்குப் பிராணன் மந்திரங்கள் என்றால், அந்த மந்திரங்களுக்குப் பிராணன் அக்ஷர சுத்தம். அதாவது, சரியான உச்சரிப்புத்தானே?இது மாறினால் வெளி ஆகாசத்து சலனம் (vibration) , உள்ளே நாடி சலனம் இரண்டும் மாறிப் பலனே மாறிவிடும் என்று சொன்னேனல்லவா?எந்தெந்த அக்ஷரம் சரீரத்தில் எங்கே யெங்கே பிறந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் ரொம்பவும் scientific- ஆக விஞ்ஞான ரீதியில்) சிக்ஷ£ சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. வெளியிலே மநுஷ்யர் காதுபடக் கேட்கிற 'வைகிரி' என்ற சப்தத்துக்கு ஆதாரமாக உள்ளே 'பரா' என்ற சப்தம் இருக்கிறது. 'வைகிரி' வாயில், உதட்டில் வருவது. 'பரா' என்ற மூல ரூபம்தான் மூலாதாரத்தில் நாபிக்குக் கீழே இருக்கிற சப்தம். அது வைகரியாக வாய் வழியே வருவதற்கு முன் பச்யந்தி, மத்யமா என்ற இரண்டு நிலைகள் இருக்கின்றன. (Contd..)
Cheenu
யோக சித்தியில் மேலே போகப் போகத்தான் படிப்படியாக பச்யந்தி, மத்யமா, பரா முதலிய சப்தங்களை கேட்க முடியும். யோகேச்வரர்களான ரிஷிகள் பரா வாக்கையே கேட்கக் கூடியவர்கள். மூலாதாரத்தில் பரா வாக்காக எந்தெந்த சப்தங்கள் இருந்தால், அவை வைகரியாக எல்லா மநுஷ்யர்களும் வெளிப்படக் கேட்கக் கூடியபடி வரும்போது, அவற்றால் தேவதாப் பிரீதியும், லோகக்ஷேமமும், ஆத்மாபிவிருத்தியும் உண்டாகுமோ, அப்படிப்பட்ட பரா வாக்குகளையே ரிஷிகள் அகண்ட ஆகாசத்திலிருந்து கிரஹித்து வேத மந்திரங்களாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விவரங்களைத் தொல்காப்பியத்தில் ரொம்பவும் நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருக்கிற விஷயம் ஸமீபத்தில் தெரிய வந்தது.
பரா, பச்யந்தி என்பவற்றைப் பரை, பைசந்தி என்று என்று பழைய தமிழ் நூல்களிலேயே சொல்லியிருப்பது முன்னமே தெரிந்தது. ஆனாலும் பஞ்சப் பிராணங்களில் உதானன் என்ற மேல்நோக்கிப் போகிற காற்றினால்தான் மூலாதாரத்தில் சப்தங்கள் உண்டாகின்றன என்பது உள்பட, மந்திரயோகம் இத்தனை நுணுக்கமாகத் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டி ருக்கிறதென்று இப்போது தான் தெரிந்தது. வேத ஸ்வரங்களைத் தூக்கியும், தாழ்த்தியும், ஸமனாகவும், ஸ்வரபேதமில்லாமலும் சொல்வதை உதாத்ம், அநுதாத்தம், ஸ்வரிதம், பிரசயம் என்று சொல்கிறார்கள். அந்த சூட்சுமங்களை எல்லாம்கூடத் தெரிந்து கொண்டு தொல்காப்பியத்தில் சொல்லியிருக்கிறது.
கோவிலில் ஏன் ஸம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்ல வேண்டும்?தமிழில் சொன்னால் என்ன? என்ற ஒரு கேள்வி ஸமீபத்தில் வந்ததல்லவா?அப்போதுதான் நன்றாகப் படித்த தமிழ்ப் புலவர்கள் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு விளக்கிச் சொன்னார்கள். 'மந்திரங்களைப் பொறுத்தமட்டில் எந்த பாஷை என்று பார்ப்பது அடிப்படையிலேயே தப்பு;இங்கே பாஷை, அர்த்தமெல்லாம் இரண்டாம் பக்ஷம்தான். சப்த மாத்திரத்திலேயே ஏற்படுகிற பலன்தான் மந்திரங்களுக்கு இப்படி சப்தத்தினாலேயே கௌரவம், சக்தி இருக்கிறது என்று தொல்காப்பியரே சொல்லியிருக் கிறார்'என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். (Contd..)
யோக சித்தியில் மேலே போகப் போகத்தான் படிப்படியாக பச்யந்தி, மத்யமா, பரா முதலிய சப்தங்களை கேட்க முடியும். யோகேச்வரர்களான ரிஷிகள் பரா வாக்கையே கேட்கக் கூடியவர்கள். மூலாதாரத்தில் பரா வாக்காக எந்தெந்த சப்தங்கள் இருந்தால், அவை வைகரியாக எல்லா மநுஷ்யர்களும் வெளிப்படக் கேட்கக் கூடியபடி வரும்போது, அவற்றால் தேவதாப் பிரீதியும், லோகக்ஷேமமும், ஆத்மாபிவிருத்தியும் உண்டாகுமோ, அப்படிப்பட்ட பரா வாக்குகளையே ரிஷிகள் அகண்ட ஆகாசத்திலிருந்து கிரஹித்து வேத மந்திரங்களாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விவரங்களைத் தொல்காப்பியத்தில் ரொம்பவும் நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருக்கிற விஷயம் ஸமீபத்தில் தெரிய வந்தது.
பரா, பச்யந்தி என்பவற்றைப் பரை, பைசந்தி என்று என்று பழைய தமிழ் நூல்களிலேயே சொல்லியிருப்பது முன்னமே தெரிந்தது. ஆனாலும் பஞ்சப் பிராணங்களில் உதானன் என்ற மேல்நோக்கிப் போகிற காற்றினால்தான் மூலாதாரத்தில் சப்தங்கள் உண்டாகின்றன என்பது உள்பட, மந்திரயோகம் இத்தனை நுணுக்கமாகத் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டி
கோவிலில் ஏன் ஸம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்ல வேண்டும்?தமிழில் சொன்னால் என்ன? என்ற ஒரு கேள்வி ஸமீபத்தில் வந்ததல்லவா?அப்போதுதான் நன்றாகப் படித்த தமிழ்ப் புலவர்கள் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு விளக்கிச் சொன்னார்கள். 'மந்திரங்களைப் பொறுத்தமட்டில் எந்த பாஷை என்று பார்ப்பது அடிப்படையிலேயே தப்பு;இங்கே பாஷை, அர்த்தமெல்லாம் இரண்டாம் பக்ஷம்தான். சப்த மாத்திரத்திலேயே ஏற்படுகிற பலன்தான் மந்திரங்களுக்கு இப்படி சப்தத்தினாலேயே கௌரவம், சக்தி இருக்கிறது என்று தொல்காப்பியரே சொல்லியிருக்
Cheenu
அந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள், இங்கே நான் இன்னொன்றையும் சொல்லி விட வேண்டும். உங்களில் ரொம்பப் பேருக்கு அது விசித்ரமாக இருக்கும். அதாவது, வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கி றீர்கள்?அதுவே தப்பு. வேத பாஷைக்கு 'ஸம்ஸ்க்ருதம்'என்று பேர் இல்லை. அதற்குப் பேர் 'சந்தஸ்' என்பதுதான். சந்தஸ் என்றால் சந்தம் (meter) மட்டுமில்லை. சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும்கூட 'சந்தஸ்'என்றே பேர். வேதம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் (லௌகிகமான பேச்சு, எழுத்து, காவியங்கள் ஆகியன மட்டுமின்றி தர்ம சாஸ்திரம், புராண இதிஹாஸம் உள்ப்ட எல்லா விஷயங்களிலும்) பிரயோகமாகிற பாஷக்குத்தான் ஸம்ஸ்கிருதம் என்று பேர். வேத பாஷை சந்தஸ். 'வேத பாஷையில் இப்படி இருக்கிறது'என்று சொல்லுமிடங்களில், வியாகரண சாஸ்திரம் எழுதிய பாணினி, 'இதிசந்தஸி' என்பார். மற்றபடி ஸம்ஸ்கிருதத்தைச் சொல்லும்போது 'இதி லோகே'என்பார்.
ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட- அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்ணப்பட்ட - பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். 'கிருதம்' என்றால் 'செய்யப்பட்டது' என்று அர்த்தம். 'ஸம்ஸ்கிருதம்'என்றால் நன்றாக செய்யப்பட்டது. அப்போது யாரோ உட்கார்ந்து கொண்டு பிரயத்தனப்பட்டு இந்த பாஷையை செய்திருக்கிறார்கள் என்று ஆகிறது. வேத பாஷை இப்படி இல்லையே !அது தானாக flash ஆனது (பளிச்சிட்டது) என்றுதானே இத்தனை நாழி கதை சொன்னேன்? அதனால் அதில் grammar (இலக்கணம்) முக்கியமில்லை. லோகோபகாரமாக இப்படி வந்த சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக grammar முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள். அதனால்தான் Vedic Grammar (வேத இலக்கணம்) , Vedic Prosody (வேதத்தின் யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. வேதத்திலிருந்து ஸம்ஸ்கிருதம் பண்ணப்பட்டது என்பதாலேயே வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை. (contd..)
அந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள், இங்கே நான் இன்னொன்றையும் சொல்லி விட வேண்டும். உங்களில் ரொம்பப் பேருக்கு அது விசித்ரமாக இருக்கும். அதாவது, வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கி
ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட- அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்ணப்பட்ட - பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். 'கிருதம்' என்றால் 'செய்யப்பட்டது' என்று அர்த்தம். 'ஸம்ஸ்கிருதம்'என்றால் நன்றாக செய்யப்பட்டது. அப்போது யாரோ உட்கார்ந்து கொண்டு பிரயத்தனப்பட்டு இந்த பாஷையை செய்திருக்கிறார்கள் என்று ஆகிறது. வேத பாஷை இப்படி இல்லையே !அது தானாக flash ஆனது (பளிச்சிட்டது) என்றுதானே இத்தனை நாழி கதை சொன்னேன்? அதனால் அதில் grammar (இலக்கணம்) முக்கியமில்லை. லோகோபகாரமாக இப்படி வந்த சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக grammar முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள். அதனால்தான் Vedic Grammar (வேத இலக்கணம்) , Vedic Prosody (வேதத்தின் யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. வேதத்திலிருந்து ஸம்ஸ்கிருதம் பண்ணப்பட்டது என்பதாலேயே வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை. (contd..)
Cheenu
பிற்பாடு ஸம்ஸ்கிருதம் தானாக வளர்ந்தும், ஸர்வ தேசப் பரிவர்த்தனைகளாலும் அநேக புது வார்த்தைகள் அதில் சேர்ந்த மாதிரி வேதத்தின் பாஷையில் ஏற்படவில்லை. வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை என்பதே, இப்போது நம் தாய் பாஷைகளுக்கு இல்லாத ஸ்தானம் ஸம்ஸ்கிருதத்துக்கு ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேத வித்யையை ஆதரிக்காமல் கோபப்படுகிறவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இரண்டு கால் பிராணி, நாலு கால் பிராணி ஆகிய அனைத்துக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணும் சலனங்களை உண்டாக்கக் கூடிய சப்தங்களையே உடையதான வேத பாஷையும், மற்ற அநேக மந்திர சாஸ்திர மந்திரங்களின் பாஷையும், நாம் நடைமுறையில் சொல்கிற அர்த்தத்தில் பாஷையே இல்லை. அவை ஒரு ஜாதிக்கோ, இனத்துக்கோ உரியன இல்லை. ஸமஸ்தப் பிரபஞ்சத்துக்குமான பாஷை என்று வேண்டுமானால் சொல்லலாம். சந்திரன் எல்லா தேசத்துக்கும் ஜிலுஜிலு என்ற நிலா அடிக்கிறது;சூரியன் லோகம் பூராவுக்கும் ஜீவஸத்தைத் தருகிறது. "எந்த தேசத்து சந்திரன்?எந்த தேசத்து சூரியன்? எங்களுக்கு இது வேண்டாம்"என்பார்களா?
தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லி, "இப்படிப்பட்ட அக்ஷரங்களைப் பற்றி இந்த தொல்காப்பியத்தில் நான் சொல்லப் போவதில்லை. இங்கே சாதாரண மனிதர்களின் காதுக்கு எட்டும் வைகரி சப்தங்களை மட்டுந்தான் விவரிக்கப் போகிறேன். மற்றது, உள் விஷயம், மந்திராக்ஷரம், 'அந்தணர் மறைத்தே'என்று எழுத்ததிகாரத்தில் (102ம் சூத்திரம்) சொல்லியிருப்பதாகவும், ஆதலால் ஆலயங்களில் மந்திர சப்தங்களை மாற்றாமல் ரக்ஷிப்பதற்குத் தொல்காப்பியமே ஆதரவாகத்தான் இருக்கிறது என்றும், அந்தத் தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் காட்டினார்கள். (Contd..)

நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்தது;வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம்; அது வேண்டாம்'என்று நினைப்பது கொஞ்சம்கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தனமும், நல்லதும் நம் பாஷையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்களும் இப்படித்தானே தங்கள் தங்கள் தாய் பாஷையைப் பற்றி நினைப்பார்கள்?அதனால் இநதப் பாஷைதான், அந்தப் பாஷைதான் என்றால் - அதில் துளிகூடப் பகுத்தறிவும் இல்லை;யதார்த்த ஞானமும் இல்லை. ஒரு பக்கத்தில் நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்கவேண்டிய ஆஸ்திக்யத்தை பரிஹாஸம் செய்து, "பகுத்தறிவு, பகுத்தறிவு"எ ன்கிறார்கள். இன்னொரு பக்கத்தில், இப்படி பிரத்யக்ஷத்திலேயே பகுத்தறிவு இல்லாமல் இருக்கிறது!ஒரு பக்கத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என்பதுதான் தமிழ்நாட்டின் தேசாசாரம் என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம், ஆதிகாலத்திலிருந்து இங்கு உறைந்து போய்விட்ட ஸநாதனமான ஸமாசாரங்களைக்கூட எப்படியாவது இல்லாமல் பண்ணிவிட்டால் தேவலை என்று நினைக்கிறோம் !மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்குத்தான் நஷ்டம். மைசூரிலிருந்து காவேரி வருகிறது, வெளிதேசத்திலிருந்து உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மருந்து வருகிறது என்றால், அதெல்லாம் வேண்டாம்; உள்ளூர் ஜலம் கிடைத்தால்தான் குடிப்போம்;உள்ளூர் மருந்தானால்தான் சாப்பிடுவோம்'என்று உயிரை விடுவார்களா?நமக்குப் பெரிய ர¬க்ஷயாக இருக்கிற மந்திரங்களில் பாஷையைக் கொண்டுவந்து, அந்நியம் எனறு ஒதுக்குவது இப்படித்தான். வாஸ்தவத்தில் அது அந்நியமும் இல்லை. நம்மோடு அந்நியோந்நியமாக ஆதிகாலத்திலிருந்து கரைந்ததுதான். (Contd.)
நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்தது;வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம்; அது வேண்டாம்'என்று நினைப்பது கொஞ்சம்கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தனமும், நல்லதும் நம் பாஷையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்களும் இப்படித்தானே தங்கள் தங்கள் தாய் பாஷையைப் பற்றி நினைப்பார்கள்?அதனால் இநதப் பாஷைதான், அந்தப் பாஷைதான் என்றால் - அதில் துளிகூடப் பகுத்தறிவும் இல்லை;யதார்த்த ஞானமும் இல்லை. ஒரு பக்கத்தில் நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்கவேண்டிய ஆஸ்திக்யத்தை பரிஹாஸம் செய்து, "பகுத்தறிவு, பகுத்தறிவு"எ
No comments:
Post a Comment