Wednesday, January 25, 2012

Sanatana Dharma - Thoughts for the day 19.01.2012

பக்தி - உருவமும் அருவமும்
---------------------------------------------------

புஷ்பத்தின் வாசனை கண்ணுக்குப் புலப்படாது. மூக்குக்குத்தான் அது தெரியும். கற்கண்டின் தித்திப்பு மூக்குக்குத் தெரியாது. அது நாவுக்குத்தான் புலனாகும். சங்கீதம் நாவுக்குப் புலப்படாது. செவிக்குத்தான் புலப்படும். சூடும், குளிரும் தொடு உணர்ச்சி கொண்ட தோலுக்குத்தான் புலனாகும். இவற்றைக் காதால் உணர முடியாது. மேலே சொன்ன நாலும் கண்ணுக்குத் தெரியாது. மாறாகப் பச்சை சிகப்பு முதலிய வர்ணங்கள் காது, மூக்கு, வாய், தோல் இவற்றுக்குப் புலப்படாது. கண்ணுக்கே புலனாகும். நாஸ்திகர் உள்பட அனைவரும் நிச்சயமாக உண்டு என்று கூறுகிற உலக வஸ்துக்கள், இவ்விதம் ஒவ்வொர் இந்திரியத்துக்குப் புலனானாலும் போதும். எல்லா இந்திரியங்களுக்குப் புலனாக வேண்டியதில்லை என்று தெரிகிறது. நாலு இந்திரியங்களுக்குப் புலனாகாமல் ஒரே ஒர் இந்திரியங்களுக்குப் புலனானாலும் ஒரு வஸ்து இருப்பதாகவே சொல்கிறோம். உதாரணமாக சங்கீதம் காது ஒன்றுக்கே புலனாகிறது. அதை ருசிக்கவோ, பார்க்கவோ, முகரவவோ, தொடவோ முடியாது. இருந்தாலும் சங்கீதம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வதில்லை அல்லவா?

ஐந்து இந்திரியங்களுக்கும் புலனாகாமலும் உண்மையில் ஒரு வஸ்து இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம். பிரபஞ்சம் முழுவதிலும் மின்சார அலைகளே வியாபித்திருக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு எந்த இந்திரியத்தாலும் அதை அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், சில பரிசோதனைகளின் மூலம் மின்சாரத்தின் வியாபகத்தையும், அது சரீரம் மூளை எல்லாவற்றிலும்கூட வியாபித்திருப்பதையும் நிரூபித்துக்கா காட்டினால் நம்புகிறோம். இத்தனை இந்திரியங்களையும் அவை கிரகிக்கிற வஸ்துக்களையும் படைத்து ஒழுங்கு செய்து வைத்த ஒரு பெரிய அறிவு இருக்கவே செய்கிறது. அதைத்தான் கடவுள் என்கிறோம். மின்சாரத்தைப்போல அதுவும் எங்கும் வியாபித்திருக்கிறது. நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது. இந்திரியங்கள் அதிலிருந்து தோன்றி அது இயக்கி வைக்கிற முறையில் கட்டுப்பட்டே வேலை செய்கின்றன. கண்ணால் பார்க்கத்தான் முடிகிறது. கேட்க முடிவதில்லை. காதால் கேட்கத்தான் முடிகிறது. பார்க்க முடியவில்லை. இவை இப்படி இருக்கத்தான் வேண்டும் என்பது அந்தப் பராசக்தி வகுத்து வைத்த கட்டுப்பாடுதான். இப்படியாக எந்தப் பெரிய சக்திக்கு இந்த இந்திரியங்கள் கட்டுப்பட்டிருக்கின்றனவோ, அந்த மகா சக்தி இந்த இந்திரியங்களுக்குக் கட்டுப்படுமா? இதனால்தான் கடவுளை எந்த இந்திரியத்தாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைக் கொண்டு கடவுளே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.


கடவுள் மகா சக்தி படைத்தவர் மட்டுமில்லை. பரம காருண்டமும் பொருந்தியவர். எனவேதான் அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அருவமாயினும், பக்தர்கள் தங்கள் இந்திரியங்களால் கிரகித்து, கண்ணாரக் கண்டு, வாயாரப் பேசி, கையார ஸ்பரிசித்து மகிழும் வண்ணம் பல உருவங்களும் தருகிறார். கடவுள் இல்லை என்று வாதம் செய்கிறவர் வாதம் செய்கிறவர்களிடம் கருணை கொண்டு அவர்களுக்கே உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார். மின்சாரம் ஒயரில் வருகிறபோது அருவமாயிருந்தாலும், காற்றடக்கமான ஒரு கண்ணாடிச் சிமிழும் (BULB) அதனுள் சிறு கம்பியும் (filament) சேர்த்து ஸ்விட்சைப் போட்டால் அருவ மின்சாரமே ஜோதி ரூபமாகிறதல்லவா? தங்கள் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக்கொண்டு சிரத்தை என்கிற ஸ்விட்சைத் தட்டிவிட்டுக் கொண்டால், அருவமான கடவுள் திவ்ய மங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார். சூரிய வெப்பத்தில் கடல் நீர் ஆவியாகப் போகும்போது அருவமாகி விடுகிறது. அதுவே மேகமாகக் குளிர்ந்தால் நம் கண்ணுக்குத் தெரிகிற மழையாகிறது. இன்னமும் குளிர்ந்தால் கெட்டியான பனிக்கட்டியே ஆகிவிடுகிறது. நம் இதயம் எத்தனைக்கெத்தனை குளிர்ந்து ஈஸ்வரனை ஸ்மரிக்கிறதோ, அத்தனைக்கத்தனை ஸ்தூலமாக அருவ தத்துவம் உருவம் கொள்கிறது.

அல்லும் பகலும் இறைவனையே நாடி, வேறு ஆசைகளை அறவே மறந்து பக்தி செய்தால் அருவப் பரம் பொருளை நன்றாக உணரலாம். இப்படி ஒருவன் ஞானம் பெறுவதினால், பக்தி செய்வதினால் ஏனைய உலக மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். ஈசுவர தரிசனம் பெற்ற ஒருவனை, பரமாத்மாவை அநுபவித்த ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் மக்களின் தாபமெல்லாம் சமனமாகி அவர்களுக்கும் ஒர் ஆறுதலும் சாந்தியும் உண்டாகின்றனவே. அந்த சாந்திக்கு ஈடாக எந்த உலகப் பொருளைச் சொல்ல முடியும்? இதுவே ஞானியால், பக்தனால் உலகுக்கு ஏற்படுகிற மிகப் பெரிய நன்மை.

- காஞ்சி மஹா ஸ்வாமிகள்


Many acts relating to God, like building temples, digging tanks are performed. While executing them, there would be many
difficulties. There would come also several kinds of dishonour. Not minding any of these, they would complete their tasks
with mental one-pointedness removing impurities from their minds and letting the mind wander. By straightening their mind,
they acquire mind control and at the end, they realize the Reality that is to be known. Digging tanks, building temples and
such other acts are called 'Poortham'. The performance of sacrifices, etc., is known as 'Ishtam'. Combining these two, we
have the word 'Ishtapoortham'.

- Shri Kanchi Maha Swamigal


மஹா பெரியவர் (எஸ். ரமணி அண்ணா)

5. கணவனை விட்டு விட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா ?

பல வருடங்களுக்கு முன், ஸ்ரீ காஞ்சி மடத்தில் மஹா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர் ஒரு இளம் வைதீகத் தம்பதி. அந்த இளம் வைதீகருக்கு சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 இருக்கலாம்.

வேறு ஒரு பக்தரிடம் உரையாடிக் கொண்டிருந்த ஆச்சார்யாள், அதை நிறுத்தி விட்டு அந்த தம்பதியை நிமிர்ந்து பார்த்தார்.அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

பெரியவா உற்சாகத்துடன், "ஏண்டாப்பா, நீ மதுரை சேஷு கனபாடிகளோட புள்ளையாண்டான் ரகுநாதன் தானே ? ஆனா...இப்போ உன்னை நான் அப்டி கேக்கக் கூடாது. ஏன்னா...இப்போ நீ ரகுநாத சாஸ்த்ரிகள் ஆயிட்டே! மதுரை ப்ராந்தியதுலே ஒங்கப்பா மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவனாகவும் ஆயிட்டே" என்று கேட்டு விட்டுத் தொடர்ந்தார்.

"இவ ஒன் ஆம்படையாள் (மனைவின்னு) தெரியறது. இவ திருச்சிராப்பள்ளி வைத்யநாத கனபாடிகளோட பேத்தி, சுப்ரமணிய வாத்தியாரின் ஏக புத்ரி. நான் சொல்லறது சரி தானே? போன வருஷம் ஒங்க கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துண்டு ஒங்க அப்பா கனபாடிகளும், மாமனார் சுப்ரமணிய வாத்தியாரும் மடத்து ஆசீர்வாதத்துக்காக வந்திருந்தாளே. அப்போ நீயும் வந்து நமஸ்காரம் பண்ணினே இல்லியா..சரி..சரி! இப்போ தம்பதி ஒத்துமையோட சௌக்கியமா இருக்கேளோனோ ?"
ஸ்வாமிகள் உரிமையோடு கேட்டு முடித்தார்.

உடனே ரகுநாத சாஸ்திரிகள், "ரொம்ப சௌக்கியமா இருக்கோம் பெரியவா, ஒங்க அனுக்ரஹத்திலே" என்று கை கூப்பிச் சொன்னார்.

பெரியவா விடவில்லை. "நீ சொல்லிப்டே. உன் ஆம்படையா வாயே திறக்கலையே" என்று சிரித்தார்.
உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக் கொண்டு, "எம் பேரு அலமேலு பெரியவா...சந்தோஷமாத் தான் இருக்கோம்...,சந்தோஷமாத் தான் இருக்கோம்" என்று சொன்னாலும், அவள் குரலில் இழையோடிய வருத்தத்தை கண நேரத்தில் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள்.

"இல்லேம்மா, நீ ஏதோ மன வருத்ததோடு இருக்கேங்கறதை உன் குரல் சொல்லறதே?

என்ன...சொல்லு...சொல்லு" என்று அன்பாக விசாரித்தார் ஸ்வாமிகள்.


"அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா" சமாளித்தாள் அலமேலு.

"இல்லே...இல்லே! உன் குரல் சொல்றதே...நீ ஏதோ வருத்தத்துலே இருக்கேங்கறதை. என்ன விஷயம் சொல்லு" கனிவுடன் கேட்டார் ஸ்வாமிகள்.

அலமேலு தயக்கியபடியே,"பெரியவா, நா ரொம்ப தெய்வ பக்தி உள்ளவள். பால்யத்தில் இருந்தே சாஸ்திர சம்பிர தாயங்கள்ளே பூரண நம்பிக்கை உண்டு.கல்யாணத்துக்கு முன்னாடி நெறைய க்ஷேத்ராடனம் எங்க குடும்பத்தோடு, வேண்டியவாளோடு போயிருக்கேன். அது நேக்கு ரொம்பப் பிடிக்கும்.

இப்போ இவரோடு கல்யாணமாகி ஒரு வருஷமாறது. அதுக்கப்புறம் ஒரு இடம் போகலே பெரியவா. அது தான் வருத்தம் என்று முடிப்பதற்குள், "ஏன்..ஏன் போக முடியலே ?" என்று இடை மறித்தார் ஸ்வாமிகள்.

அலமேலு தயங்கியபடியே, "விவாஹதுக்குப் பிறகு நான் தன்னிச்சையா தீர்த்த யாத்திரை போக முடியாதோலியோ பெரியவா! பர்த்தாவும் (கணவனும்) கூட வந்தாத் தானே யாத்ரா பலன் கிடைக்கும் ? ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன். வரமாட்டேன்கறார்" என்று விவரித்தவள், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

விஷயத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள், "அழப்படாது..அழப்படாது!" என்று சமாதானப் படுத்திவிட்டு, "என்ன ரகுநாத சாஸ்த்ரீகளே, ஆம்படயாளை இப்படி கண் கலங்க விடலாமோ ? நல்ல விஷயம் தானே சொல்லறா ? தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனம் கூப்பிட்டா போயிட்டு வர வேண்டியது தானே ? அதுல என்ன சிரமம் ?" என்று புருவங்களை உயர்த்திக் கேட்டார்.
இளைஞர் ரகுநாத சாஸ்திரிகள் மீண்டும் ஒரு தடவை பெரியவாளை நமஸ்கரித்து எழுந்து பவ்யமாகச் சொன்னார், "அவ சொல்லறதும் ஞாயம் தான் பெரியவா. ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை...பத்து நாளுக்குக் குறையாம மத்தவாளோட சேர்ந்து வட தேச க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை போயிட்டு வரணும்கறா. ஆகிற காரியமா அது பெரியவா? "


"ஏன் போயிட்டுத்தான் வாயேன்.ஆம்படயா தானே அன்போட கூப்பிடறா" இது ஸ்வாமிகள்.
உடனே ரகுநாத சாஸ்திரிகள் குரல் தழுதழுக்க,"பெரியவாளுக்கு எல்லாம் தெரியும்.நா வைதீகத்தை வ்ருதியா (தொழிலா) வெச்சுண்டுருக்கேன். அப்பாவுக்கும் ஒடம்பு முடியலே. அவர் பார்த்துடுண்டு இருந்ததை எல்லாம் இப்போ நா பாக்கறேன். வ்ருதியை விட்டுட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் பத்து பதினஞ்சு நாள் நான் எப்படி இவளோட யாத்திரை போக முடியும் பெரியவா ? நீங்களே சொல்லுங்கோ” என்று முடித்தார்.

சற்று நேரம் மௌனமாக இருந்த பெரியவா, பிறகு சிரித்துக் கொண்டே, "ஓஹோ! இந்த விஷயத்துலே என்னை சரியான மத்யஸ்தம் பண்ணி வெக்க சொல்லி கேக்க வந்தேளாக்கும் ?" என்று கூறி விட்டு தொடர்ந்தார், "அலமேலு சொல்லறதும் ஞாயம் தான். அவளுக்கு பக்தியுடன் தீர்த்த யாத்திரை போறத்லே ஒரு ருசி இருக்கு. கல்யாணம் ஆனப்புறம் பர்தாவுடன் (கணவனுடன்) போனத் தான் 'யாத்ரா பலன்' கிட்டும்கறதையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கா. ஆனா, நீ சொல்றதிலேயும் நியாயம் இருக்கு. நோக்கு வருத்தி வைதீகம். மாசம் முப்பது நாளும் ஜோலி சரியா இருக்கும். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஆம்படயாளுடன் தீர்த்த யாத்திரை போறது ரொம்ப ரொம்ப சிரமம். என்ன பண்ணறது ?"

"நீங்க தான் ஒரு மார்க்கம் சொல்லணும் பெரியவா..."இருவரும் கோரஸாக ஸ்வாமிகளைப் பிராத்தித்தனர். ஸ்வாமிகள் சற்று நேரம் யோசனை பண்ணியபடியே அமர்ந்திருந்தார். என்ன சொல்லப் போகிறாரோ என அங்கிருந்த அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார்.

"அலமேலு! ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் தீர்த்த யாத்ரா போகணும்க்கரதுலே நீ தீவிரமா இருக்கே.அதுலேயும், பர்த்தாவும் கூட வந்தாத் தான் யாத்ரா புண்ய பலன் கிடைக்கும்கற தர்ம சாஸ்திரத்தையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கே. வைதீகத்தை தொழிலா வச்சுண்டு இருக்கறதாலே, யாத்ரைக்கு உன் கூட அவர் வர்றது ரொம்ப சிரமம்க்றார். ஒரு காரியம் பண்ணுங்கோ..."ஆச்சார்யாள் முடிப்பதற்குள், "அனுக்ரகிக்கணும் பெரியவா" என்றனர் தம்பதி.


ஸ்வாமிகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, "ஒரு மார்க்கம் சொல்றேன். கேளு அலமேலு. நீ எப்ப தீர்த்த யாத்ரைக்குப் கிளம்பினாலும், பொறப்படறதுக்கு முன்னாடி, ஆத்துக்காரரை கிழக்கே பார்த்து நிக்கச் சொல்லி நமஸ்காரம் பண்ணி பிரார்த்தனை பண்ணு. நீ என்ன பண்ணறே ரகுநாத சாஸ்திரிகளே, உன்னோட மேல் அங்க வஸ்திரத்தை எடுத்து ஆம்படையா கையிலே கொடுத்து, "இது நா உன் கூட தீர்த்த யாத்திரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போயிட்டு வா"னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்திரை போன புண்ணியமும் கிடைக்கும்...ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம் தானே ?" என்று கனிவுடன் கேட்டு பிரசாதம் அளித்தார்.

மஹா பெரியவாள் சொன்ன இந்த பதிலால் இளம் தம்பதிக்குப் பரம சந்தோஷம். பெரியவாளை நமஸ்கரித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பெரியவாளின் சமயோசிதமான இந்த அனுக்ரஹத்தை கேட்டு, வியந்து மகிழ்ந்தனர்.


[Above excerpts from Kanchi Maha Swamigal Upadeshams and Wonders courtesy Sri Sai, Thuglak Online Reader forum posts on Thuglak issue dated 19.01.2012]

Sunday, January 15, 2012

Sanatana Dharma - Thought for the day (12.01.2012)

He alone is an Acharya, who, after clearly understanding the conclusive teachings of the Sastras, makes the people of the world gain their welfare by making them stick to the path shown in the Sastras and also himself does everything according to Sastras and remains in that experience.  

- Shri Kanchi Maha Swamigal



பக்தி - கர்மமும் பக்தியும்

ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் விதேக முக்தி அடையப் போகிறார் என்று தெரிந்த போது சாமானிய சிஷ்யர்களெல்லாம் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். வேதாந்த பரமான உபதேசங்கள் அளித்தீரிகள். அதில் பல விஷயங்கள் எங்களுக்குப் புரியவே இல்லை. கடைத்தேறுவதற்கு சுலபமான வழி ஒன்று சொல்ல வேண்டும் என்று ஆசாரியாள் ஸோபான பஞ்சகம் என்று ஐந்து சுலோகங்களை உபதேசித்தார்கள்.

வேதம் வகுத்த வழியைத் தினந்தோறும் பின்பற்ற வேண்டும். வேதம் கூறுகிறபடி கர்மங்களைத் தவறாமல் அநுஷ்டானம் பண்ணுங்கள். ஆசை வாய்ப்பட்டு நம் மனசுக்குப் பிடிக்கிற காரியங்களைச் செய்வது என்பதில்லாமல், லோக உபகாரமாக அவரவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மாவைச் செய்யுங்கள் என்ற கருத்துடன் என்ற கருத்துடன் தொடங்குகிறது ஸோபான பஞ்சகம்.

வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள் இவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்? என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். கர்ம மார்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை. ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா, என்று நினைக்கிறார்கள்.
ஆசாரியாள் ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கர்மத்தையே ஈஸ்வர பூஜையாக செய்ய வேண்டும் என்று தெரிகிறது.கர்மத்தையும் செய்ய வேண்டும். ஈஸ்வரனையும் மறக்காமலிருக்க வேண்டும். கர்மங்களை ஈஸ்வரார்ப்பணமாக செய்ய வேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே, அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈஸ்வரனிடம் வைத்து அவனுக்குக் கர்ம பலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை. சாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கி விட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும். பக்தியும் வேண்டும்.

நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தம நிலை சித்திக்கும். அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம். அல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால், கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா? ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்க்ள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருக்கிறான் இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் துளிக்கூட அன்போ பாசமோ காட்டாமல் வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும். பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். ஈஸ்வரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிடமாட்டான். தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். ஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரனின் மனஸில் அன்பே இல்லாமல், வெட்டு வெட்டு என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவதி பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது. இது பகவான் செய்த லோகம். சர்வ லோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை. எனவே இவர்களெல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள். ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜனசமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழவேண்டுமென்றே நமக்கு வேததர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றை நம்முடைய சொந்த ஆசைகள், லாபங்களை நினைக்காமல் செய்து பகவானின் குடும்பம் ஒழுங்காக நடக்கச் செய்வதே நம் கடமை என்ற உணர்ச்சி வருகிறபோது அதிலேயே ஈஸ்வர பக்தியும் உட்புகுந்து நிற்கும். இப்படி பக்தி உணர்வோடு கர்மம் செய்தாலே பகவத் கிருபையைப் பூரணமாக கிரகிக்க முடியும்.  

கர்மத்தையே பகவானின் பூஜையாகச் செய்கிற நிலை வருவதற்கு ஆரம்பமாகத் தனியாகப் பூஜை, பஜனை எல்லாம் செய்து பகவானை ஸ்மரிக்க வேண்டியதும் அவசியம்.
 [Above excerpts on Kanchi Maha Periyava courtesy by Shri Sai, Thuglak online Reader Forum Posts - Thuglak dt. 12.01.2012]
திருச்சிற்றம்பலம் 7.  

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு  
அரிதென, எளிதென", அமரும் அறியார்,  
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;  
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்  
மதுவளர் பொழில் திருஉத்தர கோச  
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !  
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;  
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !  

"அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,  
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என  
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !  
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.  
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !  
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !  
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !  
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !  

ஆறு - வழி.
திருச்சிற்றம்பலம் 8  

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;  
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !  
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்  
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !  
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்  
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி  
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;  
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !  

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !  
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!  
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்  
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த  
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !  
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,  
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்  
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !  
பள்ளி எழுந்தருள்க !  

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.
திருச்சிற்றம்பலம் 9  

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா  
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்  
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !  
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்  
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !  
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்  
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !  
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !  

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !  
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து  
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !  
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !  
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்  
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !  
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !  

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -  
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.


திருச்சிற்றம்பலம் 10.  
 
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்  
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி  
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்  
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்  
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்  
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்  
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !  
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !  
 
"இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது  
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்  
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,  
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,  
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்  
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !  
 
 
புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.
[Above excerpts courtesy by Shri Cheenu, Thuglak Online Reader Forum posts on Thuglak Dt. 12.01.2012]
திருப்பாவை பாடல் - 26:  
 
SIGNIFICANCE OF THE 26TH PAASURAM  
 
This 26th Paasuram is about Isvaran, the 26th Tatthvam. The Upanishad  
points Him out as the 26th Tattvam (Tamm shat-vimsakam ithyAhu:). The importance of the  
number 26 among the Tattvams is seen at Hasthigiri of Lord VaradarAjan. The chEthanam  
(the Jeevan as the 25th tattvam) climbs the 24 steps (SarIram with 24 tattvams, which is an  
obstacle for mOksham) to get to the sannidhi of Isvaran on top of the Hasthigiri waiting for it  
(jeevan) patiently as the 26th and the Supreme Tattvam.  
 
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்  
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்  
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன  
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே  
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே  
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே  
கோல விளக்கே கொடியே விதானமே  
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.  
 
பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.  
 
விளக்கம்: பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குரு÷க்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.



திருப்பாவை பாடல் - 27:

SIGNIFICANCE OF THE 27TH PAASURAM

The Paavai Nonbhu is nearing completion. Andal thinks about SanmAnam (sambhAvanai) from the Lord for the Gopis, who observed this Vratham.

JnaanyAchAryAr points out that in the “MaalE maNivaNNA” paasuram that preceded today's paasuram, the Gopis referred to Svaroopa Siddhi (AathmA's svaroopam to perform kaimkaryam always to the Lord as His servant). He says that in today's paasuram, the alankAram for them (who completed the Vratham) is described. PBA Swamy explains that “MaalE MaNivaNNA” paasuram announced the Gopis receiving Sankham, PaRai, PallANDu-isaippAr, ViLakku, Kodi and VidhAnam. These five are a few of the many blessings that are attained in Parama Padham as revealed by Swamy NammAzhwAr in His “SoozhvisumpaNi Muhil” pathikam.

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

விளக்கம்: கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். ""கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.
ADDITIONAL SIGNIFICANCE OF THIS PAASURAM (ADIYEN):  
The Govindha Naama SankIrthanam starts first in this paasuram (Koodarai vellum SEER GOVINDHAN) and reaches a crescendo during the next two paasurams: “kuraivondumillaatha govindaa” in “KaRavaikaL pin senRu” paasuram and “iRRai paRai KoLLvAnananRu kANN govindaa” in “SiRRam SiRukAlE” Paasuram. The Phala Sruthi is sung in ANDAL's own words (Bhattar PirAn Godhai Sonna) in the FINAL, Vangak Kadal Paasuram. Until the final (30th) Paasuram, the Gopis were at the front end awakening their fellow Gopis, conversing with the occupants of Nandha Bhavanam and finally addressing the Lord Himself. The paasurams were Gopi-Mukham.
திருப்பாவை பாடல் - 28:

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

விளக்கம்: குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்
SIGNIFICANCE OF THE 28TH PAASURAM  
 
In the previous Paasuram (KoodArai Vellum Paasuram), the Gopis declared, “Unnai arutthithu VanthOm” and requested the blessings of “Paal, sORu, AbharaNams, Aadai” et al. That to Lord KrishNa looked like the Gopis were seeking from Him, the siRRinbhams (worldly pleasures). He was amused and Our Lord turned around and asked them: “Oh Gopis! Your mind seems not to be steady. Are you desiring the perishable pleasures or some thing higher than that from me?”. The Gopis recognized the situation and responded:” Oh Lord, we might have given You the impression that we are seeking sanmAnam that is commonly asked of You in a lOka reethi. Our true and inner wish is to have You and perform kaimkaryams to You always”. Then the pleased Lord revealed to them His Isvaryam (MahA VibhUthis) and the Gopis were overwhelmed and sought His pardon (aparAdha KshAmanam) for taking liberties with Him and forgetting His SarvEsvarathvam. They say: “Oh Lord of the Universe! You are Selfcomplete (Svatha: PoorNan). We might have appeared to have offended You due to our Overwhelming sense of affection (PraNayam) or attachment (abhimAnam). For You. You are the most generous (parama OudhAryan). You are the most compassionate (parama DayALu). We are simple folks, who do not know the difference between our right hand and left hand (idathu kai, valathu kai aRiyAtha aai peNNkaL. We do not have the Jn~Anam, Bhakthi, anushtAnam, AachAram, Vidvath balam to seek You innately as SiddhOpAyam in the saasthrA-ordained manner. We do NOT have therefore the seven requisites (states of mind) needed to approach You (the SarvEswaran) as a SaraNAgathan:  
 
(1)Aakinchanyam (kai muthal inmai)  
 
(2)Naichyam (awareness of our lowliness to approach You)  
 
(3)awareness of Your Soulabhyam (ease of access by One& all  
 
(4)awareness of Your Parathvam (as the Supreme Lord)  
 
(5)awareness of knowledge about Sambhandham (Seshathva Jn~Anam: our uRavu to You,  
 
which is timeless & indestructible)  
 
(6)awareness of the need to seek Your pardon for our trespasses (aparAtha KshAmanam).  
 
(7)awareness of the importance of seeking You as the only rakshakan to provide the strength to  
 
seek Your lotus feet as refuge (“Unnadi sEr vaNNam aruLAi, KaLai kaNN maRRilEn”).  
 
The Lord's identity as “PrApya-PrApaka Sangrahan” (essence as means and goal) was revealed succinctly in the First verse (NaarAyaNE namakkE paRai tharuvAn) and that quintessential upadEsam is elaborated in detail in paasurams 28 and 29 (KaRavaikaL pinnsenRu and SiRRam siRukAlE vanthunnai sevitthu). Bhagavath daasyam through Sva-Svaami (servant-Master) relationship is pointed out here as the way for our liberation.
திருப்பாவை- 29 :  
 
சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன்  
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்  
பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ  
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது  
இற்றைப்றை கொள்வானென்று காண் கோவிந்தா  
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு  
உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்  
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.  
 
பொருள்:  
அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை.  
காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.
SIGNIFICANCE OF THE 29TH PAASURAM :  
This is the Third of the PradhAna-BhUtha Thiruppavai PaasurankaLs (27, 28 and 29th), where the name of Govindhan is invoked for the third time. In Sankalpam, we invoke the name of Govindhan thrice: Sri Govindha Govindha GovindhA. This paasuram is like Sankalpam for Bhagavath DhAsyam. The name of “GODHA” is inside the name of Her lord: “GOvinDHA”. When we say Govindha, Govindha, Govindha three times, we invoke the name of GOdhA embedded in there. This 29th paasuram is the last of the ThiruppAvai paasurams, where ANDAL concludes Her Prabhandham in the role of a Gopi describing the feelings of fellow Gopis performing Paavai nOnbhu. In the 30th Paasuram (Vangakkadal Kadaintha), ANDAL speaks with Her own voice/ThAnAna Tanmayil Paadiyathu. Until now, the Gopis under the leadership of ANDAL were mentioning “paRai” and were seeking it from the Lord. In this paasuram, they elaborate on the meaning of that paRai. They state the true purposes of their performance of the nOnbhu as threefold: (1) Our objective (uddhEsyam) is to perform nithya kaimkaryam at Your holy feet (2) We can not live away form You even for a second (3) Please banish any other thought or desire that might interfere with the fulfilment of the above two uddhEsyams.  
SuddhAnandha Bharathi sums up the purport of this Paasuram as: “Let us always, even unto our 7th birth be with Thee, serving Thy will alone! Oh GovindhA! Change all other desires in us into this unique aspiration to be Thy humble servant”.
திருப்பாவை – 30

SIGNIFICANCE OF THE 30TH PAASURAM
Today is the day, when the MahA Prabhandam of Soodikkoduttha NaacchiyAr comes to the stage of SaatthumuRai. It is UttharAyaNa PuNya Kaalam. It is Makara SankarAnthi dinam. May Subhiksham spread all over the lands, where ANDAL BhakthAs are there and May her endearing message for our upliftment to reach Her Lord's Lotus feet easily serve as a beacon light for us all! Today is indeed a Parama MangaLa Dinam for us all! The 30th paasuram has the benedictions for a Kaimkaryam-filled life, the fruits of Bhagavath Daasyam. BhAgavatha dAsyam is the yellai nilam for that Bhagavath dAsyam.

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்குஅப் பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்: திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.
[Above excerpts from Thiruppavai courtesy by Shri Rajagopal, Thuglak Online Reader Forum Posts on Thuglak Dated 12.01.2012]


Sunday, January 8, 2012

Kanchi Mahan Karunai (05.01.2012)


மஹா பெரியவர் (எஸ். ரமணி அண்ணா)

3. தீர்க்க தரிசனம் - ராமனாதா...நீ பெரிய பாக்கியசாலிடா !

பல வருடங்களுக்கு முன் கரூரை பூர்விகமாக் கொண்ட ராமநாத கனபாடிகள் என்கிற வேத வித்வான் ஸ்ரீ ரங்கத்தில் வசித்து வந்தார். அவர் மனைவி தர்மாம்பாள். ஒரே மகள் காமாக்ஷி.

அவர் வேதங்களை கரைத்து குடித்து இருந்தாலும் வைதீகத்தை வயிற்றுப் பிழைப்பாக கொள்ளவில்லை. உபன்யாசம் பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில், அவர்களாக பார்த்து அள்ளிகிற சன்மான தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வார். ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் மிகுந்த பக்தியும் விசுவாசமும் உள்ள குடும்பம்!

இருபத்தி இரண்டு வயதான காமாட்சிக்கு திடீர் என திருமணம் நிச்சயம் ஆனது. ஒரு மாதத்தில் திருமணம். மணமகன் ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.

தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள். "பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து. கையிலே எவ்வளவு சேர்த்து வெச்சுண்டு இருக்கேள் ?"

கனபாடிகள் பவ்யமாக, "தர்மு, ஒனக்குத் தெரியாதா என்ன ? இது வரைக்கும் அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூபா சேத்து வெச்சுருக்கேன். சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே!" என்று சொல்ல, தர்மாம்பாளுக்குக் கோபம் வந்து விட்டது.

"அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும்? நகை நட்டு, சீர் செனத்தி, புடவை, துணி மணி வாங்கி, சாப்பாடு போட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும் ? இன்னும் பதினையாயிரம் ருபாய் கண்டிப்பாய் வேணும். ஏற்பாடு பண்ணுங்கோ !"- இது தர்மாம்பாள்.
இடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள்.  
 
உடனே தர்மாம்பாள், "ஒரு வழி இருக்கு! சொல்லறேன். கேளுங்கோ. கல்யாணப் பத்திரிகையைக்  
கையிலே எடுத்துகோங்கோ. கொஞ்சம் பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ. அங்கே ஸ்ரீ மடத்துக்கு போய் ஒரு தட்டிலே பழங்களை வெச்சு, கல்யாண பத்திரிகையையும் வெச்சு மஹா  
பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கோ. பதினையாயிரம் பண ஒத்தாசை கேளுங்கோ....ஒங்களுக்கு இல்லேன்னு சொல்ல மாட்டா பெரியவா" என்றாள் நம்பிக்கையுடன்.  
 
அவ்வளவு தான் ராமநாத கனபாடிகளுக்கு கட்டுக் கடங்காத கோபம் வந்து விட்டது. "என்ன சொன்னே நீ....என்ன சொன்னே நீ ! பெரியவாளைப் பார்த்து பணம் கேக்கறதாவது...என்ன வார்த்தை பேசற நீ !" என்று கனபாடிகள் முடிப்பதற்குள்.  
 
"ஏன் என்ன தப்பு ? பெரியவா நமக்கெல்லாம் குரு தானே ! குருவிடம் யாசகம் கேட்டாள் என்ன தப்பு ?" என்று கேட்டாள் தர்மாம்பாள்.  
 
"என்ன பேசறே தர்மு! அவர் ஜகத் குரு ! குருவிடம் நாம் 'ஞானத்தை' தான் யாசிக்கலாமே தவிர, 'தானத்தை' யாசிக்கபடாது " என்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள். பயனில்லை. அடுத்த நாள் 'மடிசஞ்சியில்' (ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளிப் பை) தன் துணி மணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு விட்டார் கனபாடிகள்.  
 
ஸ்ரீ மடத்தில் அன்று மகா பெரியவாளை தரிசனம் பண்ண ஏகக் கூட்டம்! ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்று கொண்டிருந்தார் ராமநாத கனபாடிகள். நின்று இருந்த அனைவரின் கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.
பெரியவா அமர்ந்திருந்த இடத்தை கனபாடிகள் அடைந்ததும், அவர் கையில் இருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாக வாங்கி பத்தோடு பதினொன்றாக தள்ளி வைத்து விட்டார்.  
 
இதை சற்றும் எதிர் பார்க்காத கனபாடிகள். "ஐயா...ஐயா...அந்தத் தட்டிலே கல்யாணப் பத்திரிக்கை வெச்சுருக்கேன். பெரியவாளிடம் சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும். அதை இப்படி எடுங்கோ” என்று சொல்லிப் பார்த்தார். யார் காதிலும் விழவில்லை.  
 
அதற்குள் மகா ஸ்வாமிகள் கனபாடிகளைப் பார்த்து விட்டார்! பரம சந்தோஷத்துடன், "அடடே ! நம்ம கரூர் ராமநாத கனபாடிகளா ! வரணும்..வரணும்.ஸ்ரீ ரங்கத்தில் எல்லோரும் க்ஷேமமா ? உபன்யாசமெல்லாம் நன்னா போயுண்டு இருக்கா? " என்று விசாரித்துக் கொண்டே போனார்.  
 
"எல்லாம் பெரியவா அநுக்ரகத்திலே நன்னா நடக்கறது" என்று சொல்லியபடியே சாஷ்ட்டங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுந்தார். உடனே ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, "ஆத்திலே...பேரு என்ன...ம்...தர்மாம்பாள் தானே? சௌக்கியமா ? ஒன் மாமனார் வைத்ய பரமேஸ்வர கனபாடிகள். அவரோட அப்பா சுப்ரமணிய கனபாடிகள் ! என்ன நான் சொல்றதேல்லாம் சரி தானே ?" என்று கேட்டு முடிப்பதற்குள் ராமநாத கனபாடிகள், "சரி தான் பெரியவா. ஏன் ஆம்படையா (மனைவி) தர்மு தான் பார்த்துட்டு வரச் சொன்னா..." என்று குழறினார்.  
 
"அப்போ..நீயா வரல்லே ?" - இது பெரியவா.  
 
"அப்படி இல்லை பெரியவா. பொண்ணுக்கு கல்யாணம் வெச்சுருக்கு. தர்மு தான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு, பத்திரிக்கையை சமர்ப்பிச்சு.." என்று கனபாடிகள் முடிப்பதற்குள், "ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லி இருப்பா" என்று பூர்த்தி பண்ணி விட்டார் ஸ்வாமிகள்.
பதினைந்து ஆயிரம் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந் நிலையில் பெரியவா, "ஒனக்கு ஒரு அஸைன்மென்ட் வெச்சிருக்கேன். நடத்திக் கொடுப்பியா ?" என்று கேட்டார்.

"அஸைன்மன்ட்டுனா பெரியவா?" - இது கனபாடிகள்.

"செய்து முடிக்க வேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம். எனக்காகப் பண்ணுவியா?"

பெரியவா இப்படி திடீர் என்று கேட்டவுடன், வந்த விஷயத்தை விட்டு விட்டார் கனபாடிகள்! குதூகலத்தோடு, "சொல்லுங்கோ பெரியவா ! காத்துண்டு இருக்கேன் !" என்றார்.

உடனே பெரியவா, "ஒனக்கு வேற என்ன அஸைன்மன்ட் கொடுக்கப் போறேன்? உபன்யாசம் பண்ணறது தான். திருநெல்வேலி கடையநல்லூர் பக்கத்திலே ஒரு அக்ரஹாரம். ரொம்ப மோசமான நிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்லே காரணம் இல்லாமே செத்து போய்டராதாம். கேரள நம்பூதிரி கிட்டே பிரச்சனம் பார்த்ததுலே பெருமாள் கோயில்லே 'பாகவத உபன்யாசம்' பண்ணச் சொன்னாளாம். ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சார்யர் இங்கே வந்தார். விஷயத்தை சொல்லிட்டு, "நீங்க தான் ஸ்வாமி "பாகவத உபன்யாசம்' பண்ண ஒருத்தரை அனுப்பி உதவி பண்ணனும்'னு பொறுப்பை ஏன் தலையிலே கட்டிட்டு போய்ட்டார். நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணி விட்டு வரணும். விவரம் எல்லாம் மடத்து மேனேஜருக்கு தெரியும். கேட்டுக்கோ. செலவுக்கு மடத்துலே பணம் வாங்கிக்கோ. இன்னிக்கு ராத்திரியே விழுப்புரத்திலே ரயில் ஏறிடு. சம்பாவனை (வெகுமானம்) எல்லாம் அவா பார்த்துப் பண்ணுவா. போ..போ...போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ !" என்று சொல்லி விட்டு, வேறு பக்தரிடம் பேச ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.

அன்றிரவு விழுப்புரத்தில் ரயில் ஏறிய கனபாடிகள் அடுத்த நாள் மதியம் திருநெல்வேலி ஜங்கஷனில் வந்து இறங்கினார். பெருமாள் கோயில் பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அழைத்துச் சென்றார்.
ஊருக்கு சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜ பெருமாள் கோயில். பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார் கனபாடிகள். ஊர் அக்ஹ்ரஹாரதில் இருந்து ஒரு ஈ காக்கா கூட கனபாடிகளை வந்து பார்க்கவில்லை ! 'உபன்யாசத்தின் போது எல்லோரும் வருவா' என அவரே தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார்.

மாலை வேளை. வரதராஜப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்து ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை காஞ்சி ஆச்சார்யாளை நினைத்துக் கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே - ஸ்ரீ வரதராஜ பெருமாள். கோயில் பட்டர். கோயில் மெய் காவல்காரர். இவ்வளவு பேர் தான்!

உபன்யாசம் முடிந்ததும், "ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமே வரலை ?" என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார் கனபாடிகள்.

அதற்கு பட்டர், "ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டு பட்டு கிடக்கு! இந்தக் கோயிலுக்கு யார் தர்மகத்தாவாக வருவது என்பதிலே இரண்டு பங்காளிகளுக்குலே சண்டை. அதை முடிவு கட்டிண்டு தான் 'கோயிலுக்குள்ளே நுழைவோம்'னு சொல்லிட்டா. உபன்யாசதுக்கு நீங்க வந்திருக்கிற சமயத்திலே ஊர் இப்படி ஆயிருக்கேன்னு ரொம்ப வருத்தப்படறேன்" என்று கனபாடிகளின் கைகளை பிடித்துக் கொண்டு கண் கலங்கினார்.

பட்டரும், மெய்க் காவலரும், பெருமாளும் மாத்திரம் கேட்க ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார் ராமநாத கனபாடிகள். பட்டாச்சார்யார் பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணி ப்ரசாதத் தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயை வைத்தார் ! மெய்காவல்காரர் தன் மடியில் இருந்து கொஞ்சம் சில்லறையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார் ! பட்டர் ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தை சொல்லி சம்பாவனைத் தட்டை கனபாடிகளிடம் அளித்து, "ஏதோ இந்த சந்தர்ப்பம் இப்படி ஆயிடுத்து ! மன்னிக்கணும்! ரொம்ப நன்னா ஏழு நாளும் கதை சொன்னேள். எத்தனை ரூபா வேணுமானாலும் சம்பாவனை பண்ணலாம். பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயிலேத்தி விட்டுடறேன்" என கண்களில் நீர் மல்க உருகினார்.
திருநெல்வேலி ஜங்கஷனில் பட்டரும், மெய்காவலரும் வந்து வழியனுப்பினர். விழுப்புரத்துக்கு ரெயிலரி, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார் கனபாடிகள்.  
 
அன்று மடத்தில் ஆச்சார்யாளை தரிசிக்க ஏகக் கூட்டம். அனைவரும் நகரும் வரை காத்திருந்தார் கனபாடிகள்.  
 
"வா ராமநாதா ! உபன்யாசம் முடிச்சுட்டு இப்ப தான் வரியா? பேஷ்..பேஷ்! உபன்யசதுக்கு நல்ல கூட்டமோ ? சுத்து வட்டாரமே திரண்டு வந்ததோ ?" என்று உற்சாகமாகக் கேட்டார் ஸ்வாமிகள்.  
 
கனபாடிகள் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில் பெரியவாளிடம், "இல்லே பெரியவா. அப்படி எல்லாம் கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குளே ஏதோ பிரச்சனையாம் பெரியவா. அதனாலே கோயில் பக்கம் ஏழு நாளா யாரும் வர்றலே" என்று ஆதங்கப் பட்டார் கனபாடிகள்!  
 
"சரி...பின்னே எத்தனை பேரு தான் கதை கேட்க வந்தா?"  
 
"ரெண்டே ரெண்டு பேர் தான் பெரியவா ! அது தான் ரொம்ப வருத்தமா இருக்கு" - இது கனபாடிகள்.  
 
உடனே பெரியவா, "இதுக்காக கண் கலங்கப்படாது. யார் அந்த ரெண்டு பாக்கியசாலிகள் ? சொல்லேன். கேட்போம்" என்றார்.  
 
"வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா ! ஒண்ணு அந்த கோயில் பட்டர். இன்னொன்னு கோயில் மெய்காவல்காரர்" என்று சொல்லி முடிப்பதற்குள், ஸ்வாமிகள் இடி இடி என்று வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.  
 
"ராமநாதா...நீ பெரிய பாக்கியசாலிடா ! தேர்லே ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோ உபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன் தான் கேட்டான். ஒனக்கு பாரு. ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா! கிருஷ்ணனை விட நீ பரம பாக்கியசாலி" என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
"அப்படினா பெரிய சம்பாவனை கிடைச்சிருக்க வாய்ப்பில்லை. என்ன?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.

"அந்த பட்டர் ஒரு முப்பது ரூபாயும், மெய்காவல்காரர் ரெண்டகால் ரூபாயும் சேர்த்து முப்பதிறேண்டேகால் ருபாய் கிடைச்சது பெரியவா" - கனபாடிகள் தெரிவித்தார்.

"ராமநாதா! நான் சொன்னதுக்காக நீ அங்கே போயிட்டு வந்தே. உன்னோட வேதப் புலமைக்கு நிறைய பண்ணனும். இந்த சந்தர்ப்பம் இப்படி ஆகியிருக்கு!" என்று கூறி, காரியஸ்தரை கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளுக்கு சால்வை போர்த்தி ஆயிரம் ருபாய் பழத் தட்டில் வைத்துத் தரச் சொன்னார்.

இதை சந்தோஷமா எடுத்துண்டு பொறப்படு. நீயும் ஒன் குடும்பமும் பரம சௌக்கியமா இருப்பேள்" என்று உத்தரவும் கொடுத்தார் ஸ்வாமிகள்.

கண்ணீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த கனபாடிகளுக்கு தான் ஸ்வாமிகளை பார்க்க எதற்காக வந்தோம் என்ற விஷயம் அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது ! பெரியவா கிட்டே ஒரு பிரார்த்தனை..பொண்ணு கல்யாணம் நன்னா நடக்கணும். அதுக்கு...அதுக்கு..."என்று அவர் தயங்கவும், "என்னுடைய ஆசீர்வாதம் பூரணமாக உண்டு! விவாகத்தை சந்திரமௌலீஸ்வரர் ஜாம் ஜாம்னு நடத்தி வெப்பார்! ஜாக்கரதையா ஊருக்கு போய்ட்டு வா!" என்று விடை கொடுந்தார் ஆச்சார்யாள்.

ரூபாய் பதினைந்தாயிரம் இல்லாமல் வெறும் கையோடு வீடு வாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன் வீடு வாசற்படியை மிதித்தார் ராமநாத கனபாடிகள்!
"இருங்கோ. இருங்கோ..வந்துட்டேன்.." - உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக் குரல்.

வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனாள். காபி கொடுத்து ராஜா உபசாரம் பண்ணி விட்டு, "இங்கே பூஜை ரூமுக்கு வந்து பாருங்கோ" என்று கனபாடிகளை அழைத்துப் போனாள்.

பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள். அங்கே ஸ்வாமிக்கு முன் ஒரு பெரிய மூங்கில் தட்டில், பழ வகைகளுடன் புடவை, வேஷ்டி, இரண்டு திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், புஷ்பம் இவற்றுடன் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருந்தது.

"தர்மு...இதெல்லாம்..."என்று அவர் முடிப்பதற்குள், "காஞ்சிபுரத்தில் இருந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதா இன்னிக்கு கார்த்தாலே மடத்தை சேர்ந்தவா கொண்டு வந்து வெச்சுட்டுப் போறா ! எதுக்குன்?" னு கேட்டேன். ஒன்காத்து பொண்ணு கல்யாணத்துக்காகத் தான் பெரியவா சேர்ப்பிசுட்டு வரச் சொன்னானு சொன்னா !" என்று முடித்தாள் அவர் மனைவி!

கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது! "தர்மு...பெரியவாளோட கருணையே கருணை. நான் வாயைத் திறந்து ஒண்ணுமே கேட்கலை. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம் இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு !" என்று நா தழுதழுத்தவர். "கட்டுலே ரூபா எவ்வளவு இருக்குனு எண்ணினியோ?" என்று கேட்டார். "நான் எண்ணிப் பார்க்கலே" என்றால் அவர் மனைவி.

கிழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.

பதினையாயிரம் ரூபாய் !

அந்த தீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து "ஹோ"வென்று கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.
[Above excerpts courtesy Sri Sai, Thuglak Reader forum posts on Thuglak issue dated 05.01.2012]

Sanatana Dharma - Thought for the day (05.01.2012)

That which is within all, which is seen as "This" is the source. He who is within and sees as "This" is God. It is the reality. It is in yourself. What is limited is Sadhana; what is unlimited is the end.  

- Shri Kanchi Maha Swamigal


மனோ இந்திரியங்களால், கர்மாகளைச் செய்கிற காலத்திலும் கூட ஆத்மா சிந்தனை தீர்த்தத்தை கொஞ்சம் இவற்றில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே அநேக கர்மாகளுக்கு இடையிலேயும் தியானம் செய்வது, ஆத்மா விசாரதிற்கு என்று, கொஞ்ச காலம் ஒதுக்கத் தான் வேண்டும்.  

- காஞ்சி மஹா ஸ்வாமிகள்



பக்தி  
 
இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்.  
 
சிருஷ்டியில் பலவகையான சக்திகள் பல்வேறு வஸ்துக்களிடம் வியாபித்திருக்கின்றன. இயற்கையைப் பார்த்தால் ஒன்றின் சக்தியைவிட இன்னொன்றுக்குச் சக்தி அதிகம். அதையும்விட இன்னொன்றுக்கு அதிகம் சக்தி. என்கிர ரீதியில் போய்க் கொண்டே இருக்கிறது.  
 
பௌதிகமான நமக்குக் கொஞ்சம் சக்தி இருக்கிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கனம் தூக்குகிறோம். மாடு நம்மைவிட அதிக கனம் தூக்குகிறது. ஒட்டகம் அதையும்விட அதிக பளு தூக்கும். யானையால் அதற்கும் அதிக கனத்தைத் தூக்க முடிகிறது. புத்தி பலத்தைப் பார்ப்போம். தாவரங்களைவிடப் புழுவுக்கு அதிக புத்தி இருக்கிறது. புழுவை விட எரும்புக்கு அதிக புத்தி இருக்கிறது. எறும்பைவிட ஆடு மாடுகளுக்கு அதிக அறிவு. அவற்றைவிட மனிதனுக்கு அதிக அறிவு.  
 
இந்த ரீதியில் யோசித்து ஆராய்ந்து பார்த்தால் இந்த பௌதிக பலம், புத்தி பலம் எல்லாம் பூரணமாக இருக்கிற ஒர் ஆதார வஸ்துவும் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது. அதைத்தான் ஸ்வாமி என்கிறோம். நாம் நம் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டுகிறோம். குருவி தன் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு கூட்டைக் கட்டுகிறது. இந்த உலகத்தை எல்லாம் நிர்மாணிக்கிற புத்தியும், சக்தியும் கொண்ட ஒன்று இருக்கிறதல்லவா? அதுதான் ஸ்வாமி.  
 
ஒன்றிலிருந்து ஒன்றாக சக்தி அதிகமாகிக் கொண்டே போகிற இயற்கையிலிருந்து இப்படி ஈசுவர தத்துவத்திற்குப் போகிறோம். ஒன்றுக்கு ஒன்று மாறாக (Pair of Opposites) என்கிற எதிரெதிர்ச் சக்தி ஜோடிகளையும் நாம் இயற்கையில் பார்க்கிறோம். கடும் பனிக்காலம் என்று ஒன்று இருந்தால் கடும் வெயில் காலம் ஒன்று இருக்கிறது. இரவு என்று ஒன்று இருந்தால் பகல் என்பதாக ஒன்று இருக்கிறது. மிருதுவான புஷ்பங்கள் இருப்பதுபோல் கூரான முட்கள் இருக்கின்றன. தித்திப்புக்கு மாறாக கசப்பு இருக்கிறது. அன்புக்கு மாறாக துவேஷம் இருக்கிறது. எதற்கும் எதிர்வெட்டாக ஒரு மாற்று இயற்கையில் இருக்கிறது. இந்த ரீதியில் ஆலோசனை செய்தால் மனித மனசுக்கு மாற்றாகவும் ஒன்று இருக்கத்தானே வேண்டும்?மனித மனஸின் சுபாவம் என்ன? ஆபாசங்களில் முழுகிச் சஞ்சலித்துக்கொண்டே இருப்பது. திருப்தியே இல்லாமல் தவிப்பது, இதற்கு மாறாக ஆசாபாசமின்றி, சஞ்சலமே இன்றி, சாசுவத சாந்தமாகவும் சௌக்கியமாகவும் திருப்தியாகவும் இருக்கிற வஸ்துவும் இருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்ட வஸ்துதான் ஸ்வாமி.  
 

இயற்கையில் சகலமும் மாறிக்கொண்டிருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால் நாம் மாறாததாக நினைக்கிற மலையும், சமுத்திரமும்கூட காலக்கிரமத்தில் மாறிக் கொண்டேதான் இருக்கின்றன. இயற்கையில் எதுவுமே சாசுவதம் இல்லை. இதற்கு எதிராக மாறாமலே ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் ஸ்வாமி.

இயற்கையில் படிப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்று என்றும், அதே இயற்கையில் எந்த ஒன்றுக்கும் மாறுதல் உண்டு என்றும் அம்பாள் காட்டி, இந்த இரண்டாலும் கடைசியில் பரமாத்ம தத்துவம் ஒன்று இருந்தாக வேண்டும் என்று உணர்த்துகிறாள்.

அது இருந்து விட்டுப்போகட்டுமே. அதை எதற்கு உபாஸிக்க வேண்டும் என்று கேட்கலாம். நாம் எப்படி இருக்கிறோம்? எப்போதும் எல்லையில்லாத தேவைகளோடு (Wants) இருக்கிறோம். பரமாத்மா ஒரு தேவையும் இல்லாமல் இருக்கிறார். இத்தனை தேவையுள்ள நாம் அற்ப சக்தியோடு இருக்கிறோம். ஒரு தேவையும் இல்லாத பரமாத்மாவோ ஸர்வசக்தராக இருக்கிறார். நாம் ஒரே பள்ளமாக இருக்கிறோம். அவர் பரம உன்னதமாக இருக்கிறார். அவர் சக்தியிலும் ஞானத்திலும் மட்டும் உயர்ந்தவர் என்பதில்லை. தயையிலும் உயர்ந்தவராக இருக்கிறார். அதனால்தான் அவரைத் தியானித்தால் பள்ளமாக இருக்கிற நம்மையும் தூர்த்து நிரம்பச் செய்கிறார். நாம் குறைந்தவர்கள். அவர் நிறைந்தவர்.

நம் குறையைத் தீர்த்து நிறைவாகச் செய்ய அந்த நிறைவால்தானே முடியும்? அப்படிச் செய்கிற கருணா மூர்த்தி அவர். நாம் உபாஸித்தால் நம் குறைகளைப் போக்குகிறார்.
குறை இருக்கிறது என்றால் எதுவோ தேவைப்படுகிறது என்று அர்த்தம். அடியோடு தேவையே இல்லாவிட்டால் அப்படியே நிறைந்து விடலாம். நம் குறைகளை நிவற்த்தி செய்கிற பரமாத்மா கடைசியில் நமக்கு எதுவுமே தேவையில்லை என்ற நிறைவையும் தந்துவிடுவார். அப்போது அந்த உயர்ந்த மேடு நம்மைத் தூர்த்துத் தூர்த்து, பள்ளமாயிருந்த நாமும் அதோடு சமமாக, அதாகவே ஆகியிருப்போம்.
- காஞ்சி மஹா ஸ்வாமிகள்





[Above excerpts of thoughts or discourses by Kanchi Maha Periyavaa source courtesy Sri Sai, Thuglak Reader forum post dated Thuglak issue dated 05.01.2012]
திருவெம்பாவை 20.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

போற்றி ! உன் தொடக்கமான மலர் போன்ற பாதம் அருளட்டும் !
போற்றி ! உன் முடிவான செம்மலர் போன்ற திருவடிகள் அருளட்டும் !
(இறைவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாததால் அவன் பாதமே எல்லாம்).
போற்றி - எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி - திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி - நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.
திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி  
 
திருச்சிற்றம்பலம் 1.  
 
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !  
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு  
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்  
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;  
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்  
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !  
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !  
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !  
 
போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !  
பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு அதுபோன்ற  
மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில்  
எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக்  
கண்டு, அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.  
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான  
வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !  
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !  
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !  
 
சேறு - கள்/ தேன்; ஏறு - இடபம்

திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி  
 
திருச்சிற்றம்பலம் 2.  
 
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்  
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்  
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்  
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்  
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !  
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !  
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !  
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !  
 
அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில்  
விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.  
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன்  
எழுவதால் உதயமாகின்றது. கண்களைப் போன்ற மணமுள்ள  
மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி  
போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில்  
வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் ! அருளாகிய செல்வத்தைத்  
தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே ! (ஓயாது வந்துகொண்டிருக்கின்ற)  
அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க !  
 
அருணன் - சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன்  
தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்); இந்திரன் திசை - கிழக்கு;  
நயனம் - கண்; கடி - மணம்; அறுபதம் - வண்டு.

திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி  
 
திருச்சிற்றம்பலம் 3.  
 
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்  
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்  
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்  
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்  
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ  
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ  
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை  
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3  
 
தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !  
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,  
அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !  
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !  
படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !  
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !  
(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய  
குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?  
தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்  
தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்  
பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !  
 
பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;  
புன்மை - கீழ்மை.


Like to share this excellent Upanyasam on திருப்பாவை by Swami Velukkudi Krishnan  
 
http://www.youtube.com/results?search_query=Thiruppavai+~+Upanyasam+by+Sri.+Velukkudi+Krishnan+swamy&oq=Thiruppavai+~+Upanyasam+by+Sri.+Velukkudi+Krishnan+swamy&aq=f&aqi=&aql=1&gs_sm=e&gs_upl=16111314l16117524l0l16118996l5l5l0l0l0l0l1210l2647l0.2.1.6-1.1l5l0


திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

திருச்சிற்றம்பலம் 4.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும்,
(விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

திருச்சிற்றம்பலம் 5.

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

"பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.


திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

திருச்சிற்றம்பலம் 6.

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.



[Above excerpts from Thiruppaavai courtesy Sri Cheenu from Thuglak forum posts on Thuglak dated 05.01.2012]

திருப்பாவை பாடல் - 20:  
 
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று  
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!  
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு  
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!  
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்  
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்  
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை  
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.  
 
பொருள்: முப்பத்து மூன்றுகோடி தேவர்களுக்கு எல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக கடவுளே! எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் தூயவனே! எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமி தாயே! எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடியுடன், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து, இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.  
 
விளக்கம்: எல்லார்க்கும் முந்திய தெய்வம் கண்ணனே என்கிறாள் ஆண்டாள். உண்மை தானே! "ஆதிமூலமே என்று கஜேந்திரன் யானை அலறியதும் கருடன் மீதேறி காற்றினும் வேகமாய் வந்து முதலையிடம் இருந்து காத்தான். பிரகலாதன் அழைத்ததும், கருடனைக் கூட எதிர்பாராமல், தூணில் இருந்தே நரசிம்மமாய் வெளிப்பட்டான் அதனால் தான் இப்படி ஒரு பட்டம் அவனுக்கு.

திருப்பாவை பாடல் - 21:

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனே! எழுவாயாக. வேதங்களால் போற்றப்படுபவனே! பலசாலியே! வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! எழுவாயாக! உன்னை எதிர்த்த அரசர்கள் வலிமையிழந்து, உன் வீட்டு வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை வணங்குவதற்கு காத்திருக்கிறோம்.

விளக்கம்: கண்ணனுக்கு பயந்த மன்னர்கள், பயத்தால் அவனை வணங்கக் காத்திருந்தார்கள். இவ்வாறு இறைவனை வணங்குவதில் பயனில்லை. ஆனால், அவனது திருவடியே தஞ்சமென்று, ஆயர்குலப் பெண்கள் வந்தார்கள். இந்த ஆத்மார்த்த பக்தியையே இறைவன் விரும்புகிறான்.
திருப்பாவை 22: கண்களால் சாபம் போக்கும் கண்ணன்  
 
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான  
 
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே  
 
சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்  
 
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே  
 
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ  
 
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்  
 
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்  
 
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.  
 
 
பொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம்.கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.


திருப்பாவை - 23

THE CONNECTION OF THE 23RD PAASURAM TO SRI NARASIMHAN :
This Paasuram is considered to be dedicated to Sri Lakshmi Narasimhan by ANDAL.
In the hills (caves) of AhObilam, MaalOlan, Sri LakshmI Narasimhan, was in deep sleep
(mannik Kidanthu uRanginAn). He is the “Seeriya SrimAnAna Singam”. He reflected on the
unfortunate lot of the people of Kali age and their deep aj~nAnam and took pity on them and
had the sankalpam to bless them. Hence, He came out of the caves of AhObilam Hills and
went on SanchAram to the villages and towns all over BhAratha Varsham in the company of
AadhivaNN SatakOpa Jeeyar and His successors to grow the tatthva Jn~Anam of people and
to bless them with the phalan of Prapatthi at His Thiruvadi.

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் அணல் பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வருவதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக.
மணிவண்ணனே, உனது கோவிலிலிருந்து இங்கே வந்து, வேலைப்பாடுகள் அமைந்த அழகான சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களது கோரிக்கைகளைக் கேட்டு அதை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.


In this Paasuram, the Gopis describe the Majestic gait of KrishNa-simham. In
the previous (angaNmA Gn~Alatthu) paasuram, they announced their arrival at the foot of His
cot and appealed to Him to wake up and look at them and inquire about their mission. He
obliges. Here, they salute the gambhIra Nadai azhahu of that “YasOdhai iLam singam”. The
“Suka Suptha Paranthapan” (the blissfully resting scorcher of His enemies) has now arisen and
the way in which He awakens-- like a Lion waking up in its cave during rainy season after a
deep sleep-- is movingly captured by ANDAL in this Paasuram.

THE CONNECTION OF THE 23RD PAASURAM TO SRI NARASIMHAN
This Paasuram is considered to be dedicated to Sri Lakshmi Narasimhan by ANDAL.
In the hills (caves) of AhObilam, MaalOlan, Sri LakshmI Narasimhan, was in deep sleep
(mannik Kidanthu uRanginAn). He is the “Seeriya SrimAnAna Singam”. He reflected on the
unfortunate lot of the people of Kali age and their deep aj~nAnam and took pity on them and
had the sankalpam to bless them. Hence, He came out of the caves of AhObilam Hills and
went on SanchAram to the villages and towns all over BhAratha Varsham in the company of
AadhivaNN SatakOpa Jeeyar and His successors to grow the tatthva Jn~Anam of people and
to bless them with the phalan of Prapatthi at His Thiruvadi.
THE SIGNIFICANCE OF NUMBER 23
This is the 23rd paasuram. When you consider 23 as 2+3, the sum is 5. The fifth nakshathram is
Mruga Seersham or the One who has the head of an animal (Nrusimhan). Although
HayagrIvan, VarAhar have the heads of animals, according to Vedam (mrugOrana Bheema:
kuchara: giristha:), the Mrugaseershan referred to here is thus Nrusimhan. The Paasuram is
then about Narasimha Moorthy showing us the Maarga Seersahm (Talai siRantha UpAyam),
Prapatthi maargam for our salvation.
ACHARYA RAAMANUJA AND LAKSHMI NARASIMHAN
VisishtAdvaitha Matha Pravarthakar, AchArya RaamAnujA's aarAdhya dhaivam was Lakshmi
Narasimhan. He appointed 74 peetAdhipathis and gave each of them the icon of Sri Lakshmi
Narasimhan and asked them to spread the glory of our sampradhAyam and enhance its
splendor through AarAdhanam of Lakshmi Narasimhan. Thiruvarangatthu AmudanAr refers to
this important niyamanam of AchArya RaamAnujA this way:
“Valarntha VenkOpa MadangalonRAi--kizhitthavan keerthi
payir yezhunthu viLainthidum chinthai RaamAnusan”.
NARASIMHA AARADHANAI BY ACHARYAS
In all AchArya's aasthAnam, it is interesting to note that Lord Narasimhan is worshipped
(Uduppi, SrungEri, VaanamAmalai et al). Adhi SankarA sang the “Lakshmi Nrusimha
KarAvalampa SthOthram”, when he was in deep distress. His moving cry was like the
Gajendran's cry “AadhimoolamE”.


PERIYAZHWAR AND ANDAL AS BHAKTHAS OF NARASIMHA
PeriyAzhwAr was a Narasimha Bhakthar and His daughter was also Narasimha Bhakthai.
PeriyAzhwAr stated in His paasuram that he is “yEzhpadikkAl” Narasimha Bhakthan. For
seven generations, He and His family are Narasimha BhakthAs. His daughter of the next
generation is a natural Narasimha Bhakthai. She goes on to say in VaaraNamAyiram Paasuram
dealing with Laaja Homam that Narasimhan is Achyuthan (One who never fails in His
RakshaNa vratham of His BhakthAs: “arimuhan acchuthan”). ANDAL through Gopis reminds
us of the Achyutha Tatthvam of MalOlan and His aasritha PakshapAtham. One AzhwAr
saluted this Nrusimham as “azhahiyAn thAnE! ariuruvan thAne” and Kaliyan saluted Him as
“Nammudai NamperumAn” in his Nallai nenjE paasuram.
ANDAL in Her 23rd Paasuram of ThiruppAvai sang about the Vaibhavam of Nrusimhan, when
She chose the words, “Mannik Kidanthu uRangum Seeriya Singam”.


திருப்பாவை பாடல் - 24:

This Paasuram is one of the most auspicious one in ThiruppAvai. That is why we recite it
twice. Since the prayer is in the form of a PallANDu, it can be recited many times more.
The gana prEmai (deep affection) of the Gopis for their Lord poured forth in the form of
MangaLAsAsanam and PallANDu. They forgot what they came for. First, they hail the
Thiruvadi that measured the Universes as Thrivikraman (anRivvulaham aLanthAi adip
pORRi). This is the third time ANDAL refers to Thrivikraman's mysterious deed (Ongi
UlahaLantha, ambarmUdarutthu Ongi ulhalantha and anRivvulaham aLanthAi here). The
anusandhAnam for three times is perhaps to remind us that Vaamanan begged for three feet of
land from Emperor Bali. She seems to say that MahA Bali could not succeed in granting three
feet of land, but She gave Him three feet/adis (Each ThiruppAvai Paasuram has eight feet or
Yettadi). She devoted one adi in each of the above three paasurams to salute the magnificent
deed of Thrivikraman, which is hailed by the VedAs as “ThrINi padhAn VichakramE”). The
Gopis say: “anRu ivvulaham aLanthAi!adip pORRi! inRu Yaam vanthOm”. After saluting
MahA Bali VrutthAntham, the Gopis saluted the valor of the Lord in destroying RaavaNan as
Raaman, SakatAsura vadham and the wondrous deed of lifting Govardhana Giri to teach
Indran, normally an anukoolan, an unforgettable Lesson.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

விளக்கம்: இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை "போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.


திருப்பாவை பாடல் - 25:

Lord KrishNA's avathAra rahasyam is being celebrated here. He is “ajAyamAno BahudhA
vijAyathE” (He manifests Himself in many forms although He has no birth). “Devaki mahanAi
piRanthu, YasOdhai mahanAi” vaLarnthAn. Swamy NammAzhwAr addresses Him as
“piRantha MaayA” (A master-trickster taking birth in this world as one of us) in a
ThiruvAimozhi paauram.

In Her ThiruppAvai Paasuram, ANDAL does not mention explicitly the name of Devaki or
YasOdhai, but refers to both of them as “oruthi”. Here “Oruthti” is a respectful reverence to
the matchless ones (adhvidhyALs), who had the Bhaagyam of giving birth to Him and raising
Him. SampradhAyam suggests that we do not call the great ones by their given names, but
refer to them by their place of birth or vamsam (e. g: ThirukkOttiyUr nampi, Vangipuratthu
Aacchi et al) Following this sampradhAyam, MaNavALa Maamuni refers to Swamy Desikan as
“Ubhayukthar” (The great One). In this traditional way, ANDAL refers to both Devaki and
YasOdhai respectfully as “Orutthi”. He was born to one (orutthi) and was raised by the other
(orutthi).

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்: பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. "உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் "தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.


[Above excerpts from Thiruvembaavai source courtesy Sri Rajagopal, Thuglak reader forum posts on Thuglak dated 05.01.2012]


ஜ்வாலை
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளிலேற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவிந்தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை

(Above info source one reader forum post on Ananda Vikatan issue dated 5.1.2012 on Madan's Q&A where one reader with nick name 'JWALAI' has posted above info (his source unknown), in response to another post on a different context.