Saturday, March 24, 2012

ஆரியம் திராவிடம் ஒரு விளக்கம்? யார் திராவிடர்கள், யார் ஆரியர்கள்?

வேத சாஸ்திரங்களைப் பார்த்தால் ஆரிய, திராவிட என்று இரண்டு வேறு வேறு 'ரேஸ்'

(இனம்) என்பதற்குக் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லை. ஆனால் வெள்ளைக்காரர்களின் Divide - and - rule (பிரித்து ஆள்கிற) கொள்கைப்படி, அவன் இந்த ரேஸ் - தியரியைக் கட்டி விட்டுவிட்டான்.

சாஸ்திரப் பிரகாரம் என்ன சொல்லியிருக்கிறது?ஆரிய இனம் என்று ஒன்றைச் சொல்லவேயில்லை. 'ஆர்ய' என்றால் மதிப்புக்குரிய என்று அர்த்தம். அவ்வளவுதான். இன்றைய ரேஸ் கொள்கைப்படி, ஆரியனான அர்ஜுனனைப் பார்த்தே பகவான் கீதையிலே, "நீ என்ன இப்படி பேடி மாதிரி மனத்தளர்ச்சி அடைந்து அநார்யனாகி விட்டாயே !'என்கிறார். அநார்யன் என்றால் ஆர்யன் அல்லாதவன் என்று அர்த்தம். (முன்னே அன் சேர்த்தால் எதிர்ப்பதமாகிவிடும். இதையே இங்கிலீஷிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹாப்பிக்கு எதிர்ப்பதம் அன்-ஹாப்பி) மதிப்பிற்குரியவனாக் அல்லாமற் போய்விட்டாயே!என்பதுதான் இங்கு பகவான் சொல்வதன் அர்த்தமே ஒழிய, இனரீதியில் இங்கே அர்த்தம் பண்ணமுடியாது. பழங்காலக் காவியங்களை நாடகங்களைப்பார்த்தால் ராணிகள் அதற்கு மாறாக திராவிட புத்ரிகளாக அல்லவா இருக்க வேண்டும்? ஐயர் ஜாதிப் பெண்ணொருத்தி ஒரு ஐயங்கார்ப் பையனைக் கல்யாணம் செய்து கொண்டால்

தான் அவனை ஐயங்கார் வீட்டுப் பிள்ளையே! என்று கூப்பிடலாம். இவளும் ஐயங்காரானால் அப்படிக் கூப்பிடுவாளோ ? மாட்டாள். ஸீதை ராமரை ஆர்ய புத்ர என்று கூப்பிட்டபோது ஆர்ய வுக்கு ரேஸ் அர்த்தம் கொடுத்தாள் அவள் திராவிட ஜாதி என்றாகிவிடும். இது அபத்தம். இதனால் என்ன ஏற்படுகிறது ?இங்கேயும் ஆர்ய என்றால் மதிப்புக்குகந்த என்றுதான் அர்த்தம். ஆர்யபுத்ர என்றால் மதிப்புகுகந்த குடிமகனே என்று அர்த்தம்.

ஆர்ய என்பது ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக சாஸ்திரங்களில் எங்குமே சொல்லவில்லை.

த்ரவிட என்பதும் இனப்பெயராக வரவில்லை. (Contd..)


ஒரே இனத்தைச் சேர்ந்த பாரத ஜனங்களைத் தான் விந்தியத்துக்கு வடக்கே உள்ளவர்களை கௌடர்கள் என்றும் தெற்கே உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. ஆர்ய-திராவிட இன வேற்றுமை இல்லை., கௌடர்- திராவிடர் என்பதாக, இனத்தை வைத்துப் பிரிக்காமல், ஒரே இனக்காரர்களைப் பிரதேச ரீதியில் பிரித்திருக்கிறார்கள். ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுதும் கௌட தேசம்;அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்றிருந்தது. கௌட தேசத்தில் வசித்த கௌடர்களை மேலும் பிரதேச ரீதியில் ஐந்தாகப் பிரித்தார்கள். அப்படியே திராவிடத்தில் வசித்தவர்களையும் ஐந்தாகப் பிரித்திருக்கிறது. இவர்களைப் பஞ்ச கௌடர், பஞ்ச த்ரவிடர் என்பார்கள். பஞ்ச கௌடர்களில் ரொம்பவும் வடக்கே காச்மீரத்தில் இருந்தவர்களை ஸாரஸ்வதர்கள் என்றும் அதற்கு தெற்கே பஞ்சாபில் இருந்தவர்களை கான்யகுப்ஜர்கள் என்றும், பிறகு கிழக்குவாக்காக உத்தரப்ரதேஷ், பிஹாரில் உள்ளவர்களை மைதிலர்கள் என்றும் அப்புறம் தெற்கே ஒரிஸாவில் இருப்பவர்களை உத்கலர் என்ரும் பிரித்துவிட்டு கடைசியாகக் கிழக்குக்கோடியில் வங்காளத்தில் இருப்பவர்களுக்கு தனியாகப் பெயர் தராமல் கௌடர்கள் என்றே விட்டு விட்டார்கள். ஆக, ஸாரஸ்வதர், கான்யகுப்ஜர், மைதிலர், உத்கலர், கௌடர் ஆகிய ஐவரும் பஞ்ச கௌடர்கள். இப்படியே விந்தியத்திற்குத் தெற்கே ஐந்தாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகள், கூர்ஜரர் (குஜராத்தி) , மஹாராஷ்ட்ரர், ஆந்திரர், கர்நாடகர், கடைசியில் தெற்குக் கோடியில் வேறு பேர் இல்லாமல் திராவிடர் என்றே வைக்கபட்ட தமிழ் தேசத்தவர். இதிலே கேரளீயர்களான மலையாளிகளைச் சொல்லாததற்குக் காரணம், மலையாள பாஷை ஆயிரம் வருஷங்களுக்கு உள்ளாகத்தான் தனி ரூபம் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தி அதுவும் தமிழ் தேசமாகத் தான் இருந்தது.

இரண்டு வெவ்வேறு இனமில்லை; பிரதேச ரீதியில் ஒரே இனத்தில் பத்துப்பிரிவுகள். இரண்டு பாதிகளுக்குப் பேராக இருந்த கௌடம், திராவிடம் என்பன குறிப்பாக கிழக்குக்கோடி, தெற்குக் கோடிப் பிரதேசங்களுக்கு மட்டும் பேர் ஆகிவிட்டது. இன்று கௌடர்கள் என்றாலே வங்காளிகள் என்றாகி விட்டது. ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் அந்தத் தேசத்தவர்தான். அதனால் தான் அவர்களுடைய

மடத்தை கௌடீய மடம் என்றாகிறார்கள். (Contd..)


அப்படியே திராவிடர்கள் என்றால் முக்கியமாகத் தமிழர்கள்தான் என்று ஆகிவிட்டது. இதிலே ஒரு வேடிக்கை. வங்காளத்திலும், தமிழ்த் தேசத்திலும் தான் வெள்ளைக்கார நாகரிகமும் இங்கலீஷ் படிப்பும் முதலிலேயே வேகமாகப் பரவிற்று;பிரிட்டிஷ் ராஜ்யத்தில் எங்கே பார்த்தாலும் குமாஸ்தாக்களாகப் போனவர்களும் இந்த இருவர்தான்.

ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொன்றுக்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பேரை வைத்தே குறிப்பிடுவார்கள். மஹாராஷ்டிரத்தில் இப்போது பலருக்கு டிலாங் என்று (இயற்) பெயருக்குப் பின்னால் வருகிறதைப் பார்க்கிறோம். இவர்களுடைய முன்னோர்கள் தெலுங்கு தேசத்திலிருந்து மஹாராஷ்டிராவிற்குப் போய் அங்கேயே ஸெட்டில் ஆகிவிட்டார்கள். தெலுங்கு என்பதன் திரிபுதான் டிலாங். இதேமாதிரி காசி முதலான அநேக உத்தரதேச ஸ்தலங்களில் இருக்கிற சில பிராம்மணர்களுக்கு த்ரவிட் என்று வம்சப் பெயர் இருக்கிறது. ஆதிகாலத்தில் தமிழ் தேசத்திலிருந்து அங்கே போய் குடியேறினவர்களின் வம்சத்தில் வந்தவர்களே இந்த த்ரவிட்கள். இப்படி திராவிடர் என்று பெயர் கொண்ட வடக்கத்தியார் எல்லாரும் பிராம்மணர்களே என்பதைக் கவனிக்க வேண்டும். ரேஸ் தியரிப்படி பிராம்மணர்கள் திராவிடர்களுக்கு மாறானவர்கள், விரோதிகள், எதிரிகள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் வாஸ்தவத்திலோ இன்றைக்கு வடதேசத்தில் தமிழ் நாட்டுப் பிராமண வம்சத்தவர்களுக்கே தான் த்ரவிட் அடைமொழி இருக்கிறது. இதிலிருந்தே திராவிட என்பது பிரதேசத்தைக் குறிப்பதேயன்றி இனத்தைக் குறிக்கவேயில்லை என்று தெரிகிறதல்லவா?



மூன்று கடல்களுக்கு இடையில் (திரிவிடம்) உள்ள பிரதேசம் என்று இங்கே நம் நண்பர்கள் யாரோ அல்லது சுப்பிரமணியம் சுவாமியின் பேச்சிலோ கேட்டேன். சர் பெயராக ஆர்ய மற்றும் திராவிட் ஆகிய இரண்டும் உள்ள பிராமணர்களை நான் அறிவேன். அப்படியே இரண்டு இனம் இருந்தால்தான் என்ன? ஒரு தேசம் என்பது வீடு தொழில் நாடு கடவுள் ஆகியன பற்றி ஏறக்குறய ஒத்த சிந்தனைகளையும் செயல்களையும் கொண்டிருப்பது மட்டுமே . ஒரு இந்தியனை எடுத்துக்கொண்டால் அவன் எங்கிருந்து வந்தாலும் மற்றொரு இந்தியனோடு சிறிது நேரத்தில் ஒன்றிப் பழக முடியும்.ஆனால் ஒரு வெள்ளையனோடு அவ்வாறு பழக இயலுமா? அதுதான் தேசியம். கருணாநிதி ஆரம்பத்தில் வெற்றி கொள்ள முடிந்ததுக்குக் காரணம் மக்களிடையே இருந்த எக்கச்சக்க பொருளாதார வேறுபாடுதான். அதே போல கிராஃப்ட் எனப்படும் கைத்தொழில்கள் எல்லாம் வெள்ளையனின் இயந்திரமயத்தினாலும் அவர்கள் திட்டமிட்டு அவற்றை அழித்ததாலும் ஒழிந்து போக பல்லாயிரக்கணக்கான பேர் மிகவும் ஏழ்மையான நிலைக்குத்தள்ளப்பட்டு நின்றபோது அவர்களின் அந்நிலைக்கு பிராமணர்கள்தான் காரணம் என்று கதை கட்டிவிட்டு அவர்களுக்கு நெருக்கமாகி அந்த நெருக்கத்தைக்கொண்டே அரசியல் நடத்தியவர் கருணாநிதி. அதிலும் மிகக் கடை நிலையில் இருந்த ஜாதிக்காரர்களை அவர் கண்டு கொள்ளவில்லை. அவர்களை நிலச்சுவாந்தாரிடமிருந்து பிரிப்பது கடினம் என்பதால் அதற்கு அடுத்த நிலையில் இருந்த முன்னாள் கிராஃப்ட் காரர்களைக் கொண்ட ஜாதிக்காரர்கள் மீதே அவர் கவனம் செலுத்தினார். அவர்களும் பிராமணப்புச்சாண்டியை நம்பினார்கள்.

ஆனால் ஏற்ற தாழ்வுகள் இந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் எந்த நாட்டிலும் கருணாநிதி போன்றவர்கள் குளிர்காயத்தான் செய்வார்கள்.
இந்த தடவை ஜெஜெ கொஞ்சம் நல்லவிதத்தில் செயல்படுகிறார்போலத்தோன்றுகிறது. அடுத்த பத்தாண்டுக்கான திட்டம் என்று இன்று அறிவித்துள்ளார். அதில் மிகமுக்கியமான திட்டமாக மனித வளத்தை மேம்படுத்துவதைப்பற்றி குறிப்பிட்டு உள்ளார். தமிழர்கள யாரும் எதாவது வாழ்வாதாராமான திறன் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவானால் இனம் எல்லாம் மறந்து போகும்.
 
[Above is some excerpts from Reader comment on Thuglak Issue dated 22.3.2012 on Column titled 'Kalaignarin Pazhaiya Vasanam' by Columnist Subbu.............whereby these reader comments courtesy by Shri Cheenu, Shri Venkat..............and others.]
 


2 comments:

  1. Ungal karuththukkalai maruththup pesa thondrugirathu!

    ReplyDelete
  2. Hello, pls feel free to share your views. Kindly take note of the footer note/disclaimer at the end (as cited above). It's is not my personal views/opinions. Just sharing in my blog what has been exchanged elsewhere. Yet, you have every right to comment your point, after all, it's all knowledge sharing with an assertion that 'not everyone is perfect in this world'.

    ReplyDelete