Monday, July 27, 2015

கடவுளைத் தேடி (பாலகுமாரன்) Part 1 (01.04.2015)



கடவுளைத் தேடி (பாலகுமாரன்)


பாலகுமாரன் அவர்கள் நக்கீரன் பத்திரிக்கையில் எழுதி வந்த தொடரின் தொகுப்பு.

பின்னாளில் அறிவு பூர்வமாய் ஆன்மீக ரீதியாய் தெரிந்துகொள்ள உபயோகப்படும் என்று இதை இங்கு தரவிறக்கம் செய்துள்ளேன்.

எழுதியது யார் என்பது முக்கியமல்ல,

அனுபவத்தை எழுதுகிறார், அவர் பின்னாளில் என்ன செய்தார் எப்படி வாழ்வில் உயர்ந்தார் அல்லது சிக்கிச் சீரழிந்தார் சமூகத்தில் கல்லடி பட்டார் என்பது அவர்தம் தனிப்பட்ட பிரச்சினை.

வளரும் இளைஞனுக்கு பலரது வாழ்க்கையும் அவர்தம் அனுபவமுமே பாடம். அதுவரை எழுத்தை மட்டுமே பார்ப்போம் என்பதே எனது தாத்பர்யம்.

போற்றுவார் போற்றுவதும் தூற்றுவார் தூற்றுவதும் போகட்டும் கண்ணனுக்கே!!

எமக்குத் தொழில் எழுதுவது, எப்படி எழுதுவது என்பதை கற்பது, இடையே வாழ்க்கைப் பாடமும் ஆன்மீகமும் இறையுணர்வும் கிடைத்தால் அதுவே ஒரு போனஸ்தான். நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன், வாசிப்போம், ஒழுக்கத்துடன் வளர்வோம்.

நல்லன கொள்வதும் அல்லன தள்ளுவதும் நம் கையில்தானே இருக்கிறது?

வேறு உள் நோக்கம் இல்லை.

http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=23061



அண்மைச் செய்திகள்
டெல்லி மகளிர் ஆணையராக சுவாதி மலிவால் நியமனத்துக்கு ஆளுநர் ஒப்புதல் || மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் : பெருந்திரள் பேரணி ஆர்ப்பாட்டம் (படங்கள்) || என் மகள் என் பெயரை கூகுளில் தேடும்போது கிரிக்கெட் வீரராக மட்டுமே அவள் அறியவேண்டும்;தீவிரவாதியாக அல்ல || மின்னலுடன் சென்னையில் கனமழை || 5-வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு || காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட : தென் சென்னை இந்திய மாணவர் சங்கம் (படங்கள்) || திருப்பதி லட்டு பெற தேவஸ்தான நிபந்தனை : அதிகரிக்கும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை || பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை || அத்வானி - முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு || அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய குழு : உயர்நீதிமன்றம் உத்தரவு || பஞ்சாப் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் முடிந்தது || முன்னாள் மத்திய அமைச்சருக்கு நான்கரை ஆண்டு சிறை || மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கண்டனம் : G.K.நாகராஜ் ||
Logo
ஓம்
மங்கள வாழ்வுக்கொரு பங்குனி...
......................................
பாண்டவரின் துயர்தீர்த்த பச்சை வாரணர்!
......................................
யாகாக்னி உறையும் வன்னி!
......................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
......................................
சீடனையே குருவாய் ஏற்ற பெருந்தகை!
......................................
ஆரவல்லி, சூரவல்லிகளை அடக்கிய ஸ்ரீவனபத்ரகாளி!
......................................
பாவங்கள் போக்கும் திருத்துழாய்!
......................................
திருமேனி தீண்ட வரமருளும் விட்டலன்!
......................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
......................................
பெருமாளையே சீடனாகப் பெற்ற புரட்சியாளர்!
......................................
சர்வக்ஞ பீடமேறிய சங்கரர்!
......................................
திருப்பதியிலிருந்து வந்த...
......................................
உணர்ந்தவர் சொன்னதில்லை..
......................................
கடவுளைத் தேடி... -எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
......................................
சுவாசத்தால் யுகங்களைக் கணித்த சித்தர்கள்!
......................................
01-04-15




டவுளைத் தேடி என்கிற இந்தத் தொடர் மூலம் ஐந்து வயதிலிருந்து என் வாழ்வில் ஏற்பட்ட விதவிதமான கடவுள் தேடல் முயற்சிகளைச் சொல்லப்போகிறேன். என் உந்துதலாகவும், வழிகாட்டலின் விளைவாகவும் இவ்விஷயம் தொடர்ந்து நடந்தது. இது சுயசரிதைஇல்லை. ஆனால் என் சரிதையை- அந்தச் சூழலைச் சொல்லி இந்தத் தேடலைப் பகிர்கிறேன். சுயசரிதையாய் த்வனிப்பது தவிர்க்க முடியாதது.

தத்துவரீதியான விஷயங்களை, நீதி போதனைகளை விளக்க ஒரு கதை வடிவம் தருவதில்லையா.

உதாரணத்திற்கு, குருவைத் தேடல் என்பது எனக்கு எப்போது ஆரம்பித்ததென்று யோசித் துப் பார்த்தபோது, மிகமிக இளம்வயதில் அது சொல்லப்பட்டதை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். தந்தையாலோ அல்லது சுற்றுப்புறச் சூழ்நிலையாலோ, என் இனத்தாரின் புத்தியாலோ என் வாழ்க்கை அவ்வளவு செம்மையாக இல்லை. எல்லா விஷயங்களிலும் குழப்பமும் தடுமாற்றமும் அதிகமிருந்தன.

"மகாபெரியவாதான் எல்லாம்' என்று நிறைய பேர் அலட்டிக்கொண்டார்கள். அவர்கள்அனுபவம் என்னவோ. ஆனால் அந்த அனுபவத்தைப் பகிராது "பிராமணாளுக்கு மகா பெரியவாதான்' என்று வேறு விதமாக குழு பிரித்தார்கள். "அவாளுக்கு அவா அவா குரு. நமக்கு மகா பெரியவாதான் குரு.'


சைவர்களும் வைஷ்ணவர்களும் தனித்தனியானவர்கள் என்று சொல்லப்பட்டது. வெவ்வேறு வழி என்று உணர்த்தப்பட்டது. ஆனால் சைவர்கள் "கிருஷ்ணா நாராயணா கோவிந்தா' என்று அலறுவது ஆச்சரியமாக இருந்தது. அதேநேரம் வைணவர்கள் "சிவனை சிந்தித்தும் பார்ப்பதில்லை' என்ற உறுதியைக் கண்டு வியப்பு ஏற்பட்டது. "இப் போதைக்கு நாராயணனைக் கும்பிடலாம். காசு சம்பாதித்தபிறகு சிவன்கிட்ட போகலாம். என்ன நான் சொல்றது' என்று என் வயது ஒத்த இளைஞர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அப் பொழுதே இது எனக்கு அபத்தமாகப்பட்டது. பதினைந்து வயது சிறுவனுக்கு ஏற்படுகின்ற பெரும் குழப்பத்தின் ஒரு சிறிய பகுதி இது. வீடு "மகா பெரியவா மகா பெரியவா' என்று ஒரு கறுப்பு வெள்ளைப் படத்தை ப்ரேம் போட்டு வைத்துக் கொண்டது. "குலகுரு' என்று அம்மா சொன்னாள்.

ஆனால் என் அப்பா ஒருமுறைகூட அவரை சந்தித்ததில்லை. அவரோடு பேசியதில்லை. 

அவர் பேச்சைக் கேட்டதில்லை. அவர் சொன்ன ஒழுக்கங்களைக் கடைப்பிடித்ததில்லை. இதுதான் என்னை பெரிதும் இம்சைப்படுத்தியது. என் தகப்பனார் சந்தியாவந்தனம் செய்து நான் பார்த்ததே இல்லை. தோளில் போர்த்தி காயத்திரி ஜபம் செய்து நான் கண்டதில்லை. பூணூல் மாற்றுகின்ற அந்த ஆவணி அவிட்டத் தன்று ஒருநாள் மட்டும் மொடமொடப்பாக உட்கார்ந்து ஜபம் செய்வதுபோல நடித்துக் கொண்டிருப்பார். அன்றுதான் தோளில் அங்கவஸ்திரத்தோடு குனிந்து குனிந்து போய் நாற்பது பேர் வரிசையில் உட்காருவார். வெகு தொலைவில் நின்று கத்துகின்ற அந்த அந்தணருடைய குரல், "இது ஆறாவது பேட்ச்' என்று அலட்டிக்கொள்கின்ற அந்த அந்தணர் குரல் நாலாவது வரிசைக்கு கேட்கவே கேட்காது. ஐந்து பேட்ச்சிற்கு கத்தி அவர் குரல் செத்துப் போயிருக்கும். என்ன சொல்கிறார் என்று தெரியாது. அவர் சொல்வதை திருப்பிச் சொல்லவேண்டும். சொல்லவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எனக்கு அது விளங்காது. விளங்காத ஒன்றை சொல்லப் பிடிக்காது. எனவே, ஆவணி அவிட்டம் என்பது அப்பம், வடை, புளியோதரை என்பதா கவே போகும். போளியும், பொங்கலுமாய்ப் போகும். வாழ்க்கையும் கடவுள் தேடலும் வேறு வேறாய் இருந்தன.

தினசரி வெள்ளை பேன்ட், வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டு, ப்ரௌன் நிற செப்பல்களுடன் பால் பாயின்ட் பென், ஃபௌண்டன் பென் பையில் வைத்துக்கொண்டு, ஐந்து ரூபாய், ஆறு ரூபாய் வைத்துக்கொண்டு, கம்பெனி அடையாள அட்டையை பைக்குள் சொருகிக்கொண்டு விசுக்விசுக்கென்று அலுவலகத்திற்குப் போகின்ற பதினெட்டு வயதில் வாழ்க்கை பிரம்மிப்பாகத்தான் இருந்தது.

நாமம் இட்டவர்கள் அந்த கம்பெனியில் சைவர்களை இழிவுபடுத்துவதை நான் உணர்ந்தேன். "சார் பட்டை' என்று அவர்கள் கட்டை விரலைக் காட்டுவார்கள். அது சைவம் குடி போதை விஷயமாகச் சொல்லப்பட்டது. அது விபூதிப்பட்டை என்றும் சுட்டிக்காட்டப்படும். பட்டை என்றால் இரண்டு அர்த்தமுமாக வரும்.

கடவுள் பற்றி நான் மிகவும் குழம்பித் தவித்த நேரமது. "ருத்ரம் சமகம் சொல்லணும். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லணும்' என்று அலட்டி, வாயை கொழகொழவென்று வைத்துக் கொண்டு இவர்கள் நீட்டி முழங்கியதை நான்கேட்டிருக்கிறேன். என் வயதொத்த இளைஞர் கள் கோணலாய் நின்று, நெஞ்சு நிமிர்த்தி இதை குரல் உயர்த்திச் சொல்வதை வியப்போடு பார்த்திருக்கிறேன்.

என்னுடையது தமிழ் வீடு. "கைத்தலம் நிறைகனி அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி' என்று புரிந்தும் புரியாமலும் பாடி, பிறகு அர்த்தம் தெளிந்து அனுபவித்துப் பாடி, "இடரினும் தளரினும் எனதுருநோய் தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்' என்று உருகி, "பற்றே ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றே ஒன்றறியேன் எங்கள் மாயனே மாதவனே' என்று தோய்ந்து, ஒன்றுமே தெரியாத அந்தணச் சிறுவர்களுக்கு நடுவே நாங்கள் ஏதோ தெரிந்தவர்களாய் மின்னினோம்.

ஆனால் தமிழுக்கு மரியாதை இல்லாத நேரம் அது. அந்தணச் சிறுவர்களுக்கிடையே வடமொழி பயிலுவதும் ஸ்லோக உச்சரிப்பு களும்தான் மிகப்பெரிய கம்பீரம் காட்டிய தருணம் அது. பாசுரங்களை சந்தை என்று ஒரு அசைவில் சொல்லுவார்கள். அந்த அசைவில் வேறொருவர் சொன்னால் கூடாது என்பார்கள். அதைக் கற்றுக்கொள்ள மற்றவர்களை அனுமதித்ததில்லை. மிகமிக அழகான அந்தத் தமிழ் வேறுவித அசைவுகளோடு என் காதில் விழுந்தது. எதற்கு இப்படி என்று கேள்வி எழுந்தது. பதில் சொல்வார் யாருமில்லை. "அதற்கு ஒரு தனித்துவம் கிடைக்க வேண்டுமென்று பேசுகிறார்கள்; அப்படிச் சொல்கிறார்கள்' என்று என் தாயார் சொன்னார். அது  எனக்கு ஏற்புடையதாக இல்லை. மொழி முக்கி யமா, மொழி சொல்லும் கடவுள் முக்கியமா? எனக்கு அப்பொழுது வயது பதினாறு.

இதைவிட இன்னொரு பெரும் கூத்து ஒன்று என்னுடைய இளம்வயதில் நடந்தது. "லெக்சர் ஆன் கீதா' என்று போஸ்டர்கள் ஒட்டியிருக்கும். அற்புதமான ஆங்கிலத்தில் கீதை உரையைப் பற்றி சொல்வார்கள். எல்லாரும் அதைப் புரிந்துகொண்டு ஆஹா ஓஹோ என்பார்கள். 

எனக்கு ஒரு அட்சரம்கூட புரியாது. என்னுடைய ஆங்கில அறிவுக்கு கிரிக்கெட் கமென்ட்ரியும் தெரியாது; கீதை உபதேசமும் புரியாது.

ஊரை குறைசொல்லவில்லை. இதைப்போல நூறு சதவிகிதம் விழித்துக்கொண்டு, தவித்துக் கொண்டிருந்த இளைஞர்களைப் பற்றி சொல் கிறேன். பட்டணத்தில் இருக்கின்ற அந்தணச் சிறுவர்களாகிய எங்களுக்கே இந்த பரிதாப நிலையென்றால், கிராமப்புறங்களில் வாழும் தமிழ் மட்டுமே அரைகுறையாகப் பேசத்தெரிந்த இளைஞர்கள் நிலை இன்னும் மோசமாகத்தான் இருந்தது. அவர்களுக்குமுன் நாங்கள் எல்லாம் தெரிந்தவர்களாக அலட்டிக்கொண்டோம். ஆனால் எதுவும் தெரியவில்லை என்று எனக் குத் தெளிவாகத் தெரிந்தது.

இம்மாதிரியான அந்தணரல்லாத தமிழ் மட்டுமே தெரிந்த இளைஞர்களோடு சினேகம் கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் வேகமாக அந்த சினேகத்தை மறுத்தார்கள். "பார்ப்பானை நம்பாதே' என்றார்கள். அவர்களில் பல்வேறு ஜாதியினர் ஒன்றாகக்கூடி உறவாக, உறுதியாக நின்றார்கள். அந்த காலகட்டத்தில் அந்தண இளைஞர்களின் நிலைமைதான் மிக மோசமாக இருந்தது. "பாம்பையும், பார்ப்பானையும் கண்டா பார்ப்பானை அடி; பாம்பை விட்டுவிடு' என்று புதுமொழி இருந்தது. இந்த கடும் துவேஷத்திற்கு என்ன காரணம் என்பது என் சிறிய மூளைக்குப் புரியவேயில்லை.

எல்லாரையும் பகைத்துக்கொள்ளும் மோசமான தகப்பன். எல்லாராலும் வெறுக்கப்படும் அந்தணக் குழு இளைஞன். சேர்ந்து வாழலாமென்று நினைத்த இளைஞர்களுக்கிடையே உள்ள பொறாமை. மிகமிக கற்பனையான எம்.ஜி.ஆர். படங்கள். "அடித்து நொறுக்கிவிடலாம். உடல் வலிமைதான் முக்கியம். நல்லவனாகவும் இருக்கவேண்டும். அடித்து நொறுக்குபவனாகவும் இருக்க வேண்டும்' என்று சொல்லித்தரப்பட்ட பாடம் அபத்தமாய் இருந்தது. சண்டை எளிதே இல்லை. அது வலி மிகுந்தது. அவமானம் மிக்கது. தெருவில் சண்டையிட்டு அடித்து ஜெயித்தாலும், "தெருவில் அடித்த அயோக்கியன்' என்றுதான் வருமே தவிர, ஜெயித்தது வராது. எம்.ஜி.ஆரை மட்டும் கொண்டாடுகிறார்களே,அது எப்படி? அது சினிமா. எம்.ஜி.ஆரைக் கொண்டாடுவார்கள். ஆனால் நீ சண்டையிட்டால் அசிங்கப்படுத்துவார்கள். பொறுக்கி என்பார்கள். இதை வெகு எளிதில் கற்றுக் கொண்டேன்.

அந்தக்கால படங்களில் சிவாஜி உதடு பிதுக்கி நிறைய அழுவார். அப்படி அழவும்அவமானமாக இருந்தது. அழும்போது பின்னால் வயலின்கள் ஒலிக்கவேண்டும். கிட்டார் அழ வேண்டும். புல்லாங்குழல் இசைக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த அழுகை மற்றவருக்குள் பெரிய துக்கமாகப் படரும். இந்த இசையில்லாத அழுகை ஒரு எழவும் செய்யாது. அதுவும் புரிந்தது. நான் சினிமாவிலிருந்து வெகுவேகமாக விலகினேன். சினிமா சொல்லித் தராது என்று நம்பினேன்.


இவர்கள் இரண்டு பேருக்கு பதில் ஜெய்சங்கர் படங்கள் அர்த்தமுள்ளதாய் எனக்குப் பட்டன. அவருடைய உயரமும் பேன்ட், உள்ளே சொருகப்பட்ட சட்டை, தலைமுடி, ஒரு குறுகிய நடை, கோணலாய் நிற்கின்ற போஸ். இதுதான் பல இளைஞர்களைக் கவர்ந்தது. ரவிச்சந்திரன் என்ற நடிகர் வேறுவிதமான தலை அலங்காரம், வேறுவிதமான மீசையோடு வர, அவர் பின்னாலும் கூட்டம் திரண்டது. இவையெல்லாம் பெரிய ஆதர்சமா?  இல்லை என்பதை நான் தெள்ளத் தெளிவாய் உணர்ந்தேன்.

"சிவாஜி மன்றத்தில் சேந்துர்ரியா. முதல் நாள் முதல் ஷோ ஒரு டிக்கெட் நிச்சயம்.' நான் சேரவில்லை. ஆனால் டிக்கெட் கிடைத்தது. "குங்குமம்' என்ற படம். சகிக்கவில்லை. "எப்படிஇருக்கிறது படம்' என்று கேட்டால், "அற்புதம், பிச்சி உதறிட்டாரு' என்றுதான் சொல்லவேண்டும். மாறாக தயங்கினால்கூட "என்னா' என்று முறைப்பார்கள். இந்தக் கூட்டமே நமக்கு ஆகாது என்று நான் அந்த இடத்திலிருந்து நகர்ந்தேன். ஒருவேளை அங்கு ஐக்கியமாகி இருந்தால்- ஒருவேளை சினிமா நிறைய பார்த்திருந்தால், பிற்பாடு சினிமாவில் சேர்ந்தபோது சினிமாவைப் பற்றி இன்னும் அதிகம் தெளிவுள்ளவனாக இறங்கியிருப்பேன். சினிமாவே பார்க்காது சினிமாவில் இறங்கியது பிற்பாடு செய்த தவறு. ஒரு எம்.ஜி.ஆர். படத்தை இருபத்தைந்து முறை பார்த்தவர்கள் எல்லாரும் சினிமாவில் இருந்தார்கள். சிவாஜி கணேசன் வசனங்கள் அத்தனையும் உருப்போட்டவர்கள் அத்தனை பேரும் சினிமாவில் கொடி நாட்டினார்கள்.

அப்பொழுது எனக்கு யார் தலைவர்? ஆங்கிலத்தில் கீதை பேசும் இந்தானந்தா, அந்தானந்தா எவருமில்லை. உணர்ச்சி வேகம் கொடுத்து உடல் உறுதி கொடுக்கும் சினிமா நடிகர்கள் இல்லை. இலக்கியம் உதவுமா? நான் அந்தப் பக்கம் திரும்பியபோது, யாப்பிலக்கணக் கவிதைகளே கவிதைகள் என்று சொல்லப்பட்டன. புதுக்கவிதை எழுதுகிறவன் சோம்பேறி என்று மரபுக்கவிதை தெரியாதவனாலேயே இழித் துரைக்கப்பட்டோம்.

அம்மா யாப்பு சொல்லிக்கொடுத்தாள். 

ஆனால் கவிதை மிகப்பொய்யாக இருந்தது. 

யாப்பில் அடங்குவதற்காக கவிதைக்கு வாலும், தலையும் ஒட்டவைக்கப் பட்டன. கழுதைக்கு யானைக் காதுகள் ஒட்டவைக்கப்பட்டன. "பொங்கலே வா' என்று நான் கவிதைகள் எழுதத் துவங்கினேன். அது பச்சைப் பசப்பல். தமிழ்க்கவிதைகள் எழுதுவதற்கு பொங்கல் ஒரு நேரம். தீபாவளிக்குக்கூட தமிழ்க்கவிதை எழுத முடியாது. "ஹேப்பி தீபாவளி' என்று ஆங்கிலத்தில்தான் வர்ண அட்டைகள் அனுப்பமுடியும்.

வேறு யார் நல்ல தலைவர்? யார் வழிகாட்டி? கண்ணதாசனா. அவர் கவிதைகளில் கிறக்கம்கொண்டு, அவர் சினிமா பாடல்களில் மோகம் கொண்டு அவருடைய கூட்டங்களுக்கு நான் போனேன். "சிவாஜிகணேசன் நின்றால் ஒரு நடிப்பு, அமர்ந்தால் ஒரு நடிப்பு, திரும்பினால் ஒரு நடிப்பு. இவனை சிரிக்கச் சொன்னால் அழுவான். அழச் சொன்னால் சிரிப்பான். மர...க்கட்டை' என்று எம்.ஜி. ராமச்சந்திரனை அவர் இழித்துப் பேசியபோது நான் கைதட்டி ஆரவாரம் செய்தேன்.

கவிஞர் கண்ணதாசனை நான் ஆதரிக்கிறேன் என்று நான் எப்படி சொல்ல முடியும்? இப்படித்தானே. 

ஆனால் கண்ணதாசன் மது அருந்துபவர். மது அருந்துதலைப் பற்றி பேசுபவர். 

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு. ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என்று சொல்பவர். அவரைப் பற்றிய வதந்திகள் என்னை வியக்கவைத்தன. இவரை எப்படி தலைவராகக் கொள்வது என்று தடுமாறினேன். ஆனால் கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்னால் மிகப் பெரிய இளைஞர் பட்டாளம் இருந்தது. 

அவர்மீது கட்டுக்கடங்காத பிரேமை யோடு கூடிய இளைஞர்கள் இருந்தார் கள். "கண்ணதாசன்' என்ற பெயரில் வந்த சஞ்சிகை நன்கு விற்பனை ஆனது. முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை அந்த "கண்ண தாசன்' புத்தகத்தை பலமுறை விடாது படித்தேன். 

அம்மாதிரி படிக்க உதவி செய்த இன்னொரு புத்தகம் இலக்கிய மாதாந்திரி "கணையாழி'.

நல்ல சிறுகதைகள் வந்தன. குமுதத்தில் சாண்டில்யன் கொடிகட்டிப் பறந்தார். அவரு டைய சரித்திரக் கதை வர்ணனைகள் மனதை பிய்த்துப் போட்டன. தப்பித்துக்கொள்ள மிகப்பெரிய பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. கதைகளில் சரித்திரம் பின்னுக்குத் தள்ளப் பட்டது. வர்ணனைகள் வேதாளம்போல பின் பக்கம் வந்து தோளைக் கட்டிக்கொண்டன. பெரிய மார்புகள் உள்ள மஞ்சள் அழகி சாகடித்தாள்.

"இதுக்குத்தான் நான் கதை படிப்பதே கிடையாது. புத்தகம் படிப்பதே கிடையாது. எல்லா வாரப்பத்திரிகையும் தப்பு. பேசாத உட்கார்ந்திட்டு இருக்கணும்' என்று ஒழுக்கசீடர்களான சில நண்பர்கள் உபதேசம் செய்தார்கள். யார் வீட்டிலோ போர்ன்வீட்டா டப்பாவை திருடிக்கொண்டு வந்து அவசர அவசரமாக வாயில் போட்டுக்கொண்டார்கள். என் வீட்டில் ஓவல் டின் இருந்தது. அதனால் எனக்கு போர்ன்வீட்டா ரசிக்கவில்லை. அதை வாயில் அடைத்துத் தின்னப் பிடிக்கவில்லை. போர்ன்வீட்டா தின்றுவிட்டு புஜத்தை முறுக்கிப் பார்த்துக்கொள்கின்ற இளைஞர்களை நான் ஆவலோடு வேடிக்கை பார்த்தேன்.

பதினாறிலிருந்து பதினேழு வயது காலகட்டத்தில்தான் நான் கௌடியா மடத்து பிரம்மச்சாரியை சந்தித்தேன். இதைப்பற்றி ஏற்கெனவே "முன்கதைச் சுருக்கம்' என்கிற என்னுடைய நூலில் எழுதியிருக்கிறேன். பதினாறு வயதில் நான் எஸ்.எஸ்.எல்.சி.முடித்தபோது டைப்ரைட்டிங் ஹையர் பாஸ் செய்திருந்தேன். பதினேழு வயதில் ஒரு ஜெனரல் இன்ஷுரன்ஸ் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்தது. டைப்பிஸ்ட் வேலை. முதுபெரும் கிழவர்களுக்கு நடுவே நான் புகுந்து புறப்பட்டு வரவேண்டும். அவர்கள் பந்தாடினார்கள். அவர்களின் அனுபவத் திரட்சியெல்லாம் என்மீது வைத்து தைத்தார்கள். என் வெகுளித் தனத்தை தூண்டி விட்டு வாய் ஓயாது சிரித்தார் கள். ""டைப்ரடிங்தானே உனக்கு சோறு போடறது.''

""ஆமா.''

""வந்தவுடனே அந்த கவரை எடுத்துட்டு அதைப் பார்த்து நின்னு கும்பிட வேண்டாமா. 

அதை வேண்டிக்க வேண்டாமா. எது தொழிலோ அதுதானடா தெய்வம்.''

""ஆமா ஆமா.''

""கண்ணை மூடிண்டு அஞ்சு நிமிஷம் நில்லு.'' என்னை நிற்க வைத்துவிட்டு அவர்கள் சுற்றி நின்று வாய்பொத்திச் சிரிப்பார்கள். ""பைத்தியமாடா நீ. டைப்ரைட்டருக்கெல்லாம் நமஸ்காரம் பண்றே. விழுந்து கும்பிடுன்னா கீழே விழுந்து கும்பிடுவியா. அவங்க கேலி செய்றாங்கன்னு தெரியலியா.'' என் வயதொத்த இன்னொரு இளைஞன் எனக்கு புத்தி சொன்னான். நான் அவ்வளவு மக்காக இருந்தேன். தவறு உலகத்தின் மீது இல்லை. என்மீது.

இந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் தான் நான் இராயப்பேட்டை கௌடியா மடம் பிரம்மச்சாரி ஒருவரை சந்தித்தேன்.

ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் தெரியாத விஷயம். பின்தலையில் லொட்டென்று அடித் தார்கள். அதை ஒருவர் கண்டித்தார். என்னை அடித்தவர் தட்டை எடுத்து அவர்மீது வீச, அவர் செருப்பைக் கழற்றிக்கொண்டு பாய, பெரும் கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது. செருப்பைக் கழற்றிப் பாய்ந்தவருக்கு மெமோ கிடைத்தது. நான் உள்ளுக்குள் உதறினேன். 

வேலையைவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்தேன். என்னுடைய சம வயது இளைஞர்கள் என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்கள். "உன்னாலதான் எல்லாம்' என்று காதோரம் சொல்லிவிட்டுப் போனார்கள். நான் என்ன தவறுசெய்தேன் என்பது எனக்குப் புரியவேயில்லை. ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் தெரியாதது பெரிய தவறா. ஒருமுறை சொல்லிக்கொடுத்தால் கற்றுக் கொள்ள மாட்டேனா. "இதுகூட தெரியாமல் எப்படி பள்ளி இறுதி தாண்டினாய்' என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்.

ஆனால் உலகம் உன்னிடம் எந்த இரக்க மும் காட்டாது. எந்த சலுகையும் தராது. "தெரிந்திருந்தா வா, இல்லையென்றால் போ. எங்கேயா வது செத்து ஒழி' என்றுதான் சொல்லும். பிற்பாடுதான் தெரியவந்தது. அவருக்குத் தெரிந்த பையனை அங்கு வேலையில் வைக்கவேண்டும். ஆனால் ஏதோ காரணத்திற்காக என்னை வைத்துவிட்டார்கள் என்று அவருக்கு கோபம் கோபமாக வந்தது. எனவே என் தலைதான் அவருக்கு விரல் பதிய கிடைத்தது.

பதினேழு வயது பையனுக்கு இது பெரிய குழப்பமான நேரம். தெரியவில்லையே என்று வெட்கப்படுவதா, சொல்லித்தரமாட்டார்களே என்று துக்கப்படுவதா அல்லது இதற்கெல்லாம் நாம் லாயக்கில்லை; அப்பா சொன்னதுபோல் பீன்ஸ் நறுக்க, அப்பளம் பொறிக்க, எச்சிலை துடைக்க, கடைசி பந்தியில் தோளில் அழுக்குத் துண்டும், இடுப்புத்துண்டுமாய் சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கதான் லாயக்கா. வேலையை விட்டுவிடலாமா. நான் எங்கு போவதென்று தெரியாமல் அந்த மாலை நேரம், கௌடியா மடம் கிருஷ்ணர் கோவிலுக்குப் போனேன். கிருஷ்ணரைப் பார்த்தேன். ஏனோ அழுகை வந்தது.

கோவிலைச் சுற்றிவந்தபோது, ஒரு பிரம்மச் சாரி உட்கார்ந்து ஜபம் செய்துகொண்டிருந்தார். ஜபம் செய்துவந்தால் ஜெயித்துவிடலாமோ. நான் அவரிடம் போய் கைகூப்பினேன். என்னவென்று கேட்டார். ""என் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது. எனக்கு எதுவும் தெரியவில்லை. அதிகம் அவமானப்படுகிறேன். எனக்கு ஏதேனும் சொல்லிக்கொடுங்கள்'' என்று கைகூப்பிக் கேட்டேன்.

""துக்கப்படுகிறவனை கடவுள் தன் பக்கம் இழுத்துக்கொள்கிறார் என்பது இந்து மதத்தில் ஒரு முக்கியமான சொல். அது உண்மையெனில் எனக்கு நடந்ததும் ஒரு அற்புதம்தான். உனக்கு சொல்லத்தான் எனக்குத் தெரியாது. நான் என் குரு சொன்னதை உனக்கு சொல்லித்தர முடியாது. 

ஆனாலும் என்ன துக்கப்பட்டாலும், என்ன அவமானப்பட்டாலும், என்ன வேதனைப்பட்டாலும் உனக்கு ஒரே மந்திரம்தான். "கிருஷ்ண கிருஷ்ண' என்று சொல்.'' 

அவர் மலையாளிபோல் இருக்கிறது. பெங்காலியும் பேசுவார் போலிருக்கிறது. இருபத்தொன்று இருபத்திரண்டு வயதிருக்கும். முகம் அழுத்தமாகவும் கம்பீரமாகவும் இருந்தது. இந்த முகம் எனக்கு வரவேண்டும் என்ற ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது. ""இப்படி சொல்ல முடியுமா என்று பார். "கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்தனா. கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே' என்று இடையறாது சொல். உன்னை இது எங்கோ கடைசேர்க்கும். 

உன் துக்கம் எதுவும் எனக்குச் சொல்ல வேண்டாம். எல்லார் துக்கமும் ஒரேவிதம். யாரையும் நம்பாதே. கிருஷ்ணரை நம்பு'' என்று சொல்லிக்கொடுத்தார்.

கடவுள் என்கிற விஷயத்திற்கு முதன்முதலாய் நான் போனது அன்றே. தகப்பன் சொல்லிக் கொடுக்காததை, மற்ற உறவுகள் சொல்லிக் கொடுக்காததை, பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்காததை, பெயர்கூட தெரியாத அந்த பிரம்மச்சாரி மிகுந்த கருணையோடும் அக்கறையோடும் எனக்கு போதித்தார். நான் இறுகப் பிடித்துக்கொண்டேன்.

கிருஷ்ணருக்கு அருகேபோய் நின்றேன். இதைத் திரும்பத் திரும்பச் சொன்னேன். அழு தேன். சிரித்தேன். உள்ளே குதூகலமானேன். 

மறுநாள் காலை என்ன நடந்ததோ, எது நடந்ததோ, பிரம்மச்சாரியின் ஆசீர்வாதமோ, கிருஷ் ணரின் அரவணைப்போ தெரியவில்லை. நாலு பேர் முன்னால் தலையில் அடித்தவர் கைகூப்பி, ""ஐம் சோ சாரி. என்னை மன்னித்துவிடு. நான் முரட்டுத்தனமாக நடந்துகொண்டேன். இரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வரவில்லை'' என்று மன்னிப்பு கேட்டார். ""ஆனா நீ எங்கிட்ட வேலை செய்ய வேண்டாம். இனிமே நீ அவருக் குக் கீழே வேலை செய்'' என்று நகர்த்திவிட்டார். அவர் கோபம் குறையவில்லை என்பது புரிந்தது. ஆனால் அடி வாங்குவது அவமானமில்லை என்று தெரிந்தது. தலையில் அடித்தவரும் இப்போது அதிகாரியாக உள்ளவரும் எதிரிகள் போலிருக்கிறது. பிற்பாடு தெரியவந்தது.

""உனக்கு என்ன தெரியலையோ கேளு. நான் சொல்லித் தர்றேன். எல்லாரும் எல்லாமும் கத்துண்டு வரமுடியாது. யூ டோண்ட் ஒர்ரி. பி ஹேப்பி'' என்று ஸ்ரீமான் முரளிதரன் உற்சாகமூட்டினார். எனக்கு அது போதுமானதாக இருந்தது. நான் அடிமைபோல வேலை செய்தேன். எல்லாமும் கற்றுக்கொண்டேன். நிறைய கேள்வி கேட்டேன். ""என் வீடு சுண்ணாம்பு அடிக்கப்போறேன். கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்றியா.'' புதிய தலைவர் கேட்க, மிக சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். மூன்றாள் வேலை நான் ஒருவனாக செய்தேன். பிற்பகல் சாப்பிட்டுவிட்டு ஒரு தலையணையை வைத்துக் கொண்டு, டைனிங் டேபிள் அடியில் தூங்கினேன். 

அவரும், அவர் மனைவியும் வருத்தப்படுவது காதில் விழுந்தது. ஆனால் அந்த தூக்கத்தில் ஒரு நிம்மதி இருந்தது. இந்த அன்பு, இந்த அக்கறை கிருஷ்ணருடைய கருணை என்று நினைத்துக் கொண்டேன். ""அவர் அடிச்சதனாலதான் இவருகிட்ட வந்தீரு. இவருகிட்ட வந்ததனாலதான் இப்ப நிம்மதியா இருக்கீரு. அவரு அடிச்சது அப்ப சரிதானே'' என்று அவருக்குக்கீழ் தாசனாக இருந்த பையன் பேசினான். எனக்கு அதுவும் உண்மையென்று பட்டது.

இப்போது நான் மனிதர்களைவிட கௌடியா மடத்து கருப்பு கிருஷ்ணரை, பலராமரை, ராதையை முழுக்க முழுக்க நம்பினேன். இது வெற்று நம்பிக்கை. ஆனாலும் ஏதோ பலன் கிடைத்தது. திட்டவட்டமாக கிருஷ்ணர் உதவி செய்தார் என்று சொல்லமுடியாது. ஒருவேளை கிருஷ்ணர்மீது எனக்கிருந்த நம்பிக்கையே குதூகலமாக மாறி, மறுபடியும் அந்த நண்பரை சந்தித்து "குட் மார்னிங் சார்' என்று பவ்யமாகச் சொன்னது அவரை உலுக்கியிருக்குமோ. 

அவரை மாற்றியிருக்குமோ. அல்லது அவர் சொன்னதுபோல இரவெல்லாம் தூக்கம் வராமல் செய்திருப்பாரோ கிருஷ்ணர். எனக் குப் புரியவில்லை. கடவுள்மீது ஒரு நம்பிக்கை ஏற்பட இது காரணமாய் இருந்தது. வளர்ந்தது.

"தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்து மிட்டேன் பெரியேன் ஆயின பின் பிறர்க்கேஉழைத்து ஏழையானேன் கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.' எனக்கு கொஞ்சம் புரிந்தது. பிறருக்கே உழைத்து ஏழை யானேன். நாம் மற்றவருக்காக கூலிக்காக ஆடு கிறோம் பாடுகிறோம் என்று புரிந்தது. என்ன செய்வது? விதி. வேறு வழியில்லை என்று, "செய்வன திருந்தச் செய்' என்று அதை ஒழுங்காக செய்ய முற்பட்டேன். எனக்கு மதிப்பு உயர்ந்தது.

(தொடரும்)



Advertisement
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name *:
Email Id *:
Left:  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500):
கருத்துக்கள்(7)
Name:Pa.Si. Ramachandran, Sr.JournalistDate & Time:4/20/2015 6:26:23 AM
-----------------------------------------------------------------------------------------------------
திரு ராமக்ரிஷ், தயவு செய்து இந்த பிராம்மண துவேஷத்தை சற்று நிறுத்துங்களேன். நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இந்த ஜாதி பூசலை ஒழிக்க எங்கள் சங்கங்கள் பாடுபட்டு வருகின்றன. இந்தியாவில் காஷ்மீரில் பிராம்மண பண்டிட்டுகளும், தமிழ்நாட்டில் நாங்களும்தான் வதை, உதை படுகிறோம்..வேறெந்த மாநிலத்திலும் இந்த பிராம்மண த்வேஷம் கிடையாது. நான் பல ஜாதி இளைஞர்களுக்கும் வேலை வாங்கி கொடுத்தும் , பதவி உயர்வு கொடுத்தும் நட்பு பாராட்டுகிறேன். நீங்கள்தான் இன்னும் திருந்தவில்லை. சாரி. வெரி சாரி.
-----------------------------------------------------------------------------------------------------
Name:RamkrishDate & Time:4/17/2015 12:31:42 PM
-----------------------------------------------------------------------------------------------------
I do agree with Suresh, my opinion on these Bram. guys are similar, most of them are trying to act smart and cut throat beggars. We must be very careful with them. How ever we can't generalize entire community. About Balakumaran ..he is a smartest in his community.
-----------------------------------------------------------------------------------------------------
Name:Pa.Si. Ramachandran, Sr.JournalistDate & Time:4/17/2015 10:13:19 AM
-----------------------------------------------------------------------------------------------------
நண்பர் திரு சுந்தர் செல்வராஜ் அவர்களுக்கு, நான் யாரையும் புண் படுத்தவேண்டும் என்கிற எண்ணம் உடையவன் அல்ல. இந்த பார்பானையும் பாம்பையும் என்கிற விஷயம் எப்போதோ ஒழிந்து விட்டது. அதை மீண்டும் நினைவு படுத்துவது ஒரு ஜாதியினரை மீண்டும் மீண்டும் சீண்டிக்கொண்டே இருப்பது சரியல்ல என்பது என் கருத்து. எப்போதோ சோமநாதபுரம் கோவிலை இடித்த கஜனி முகமதுவையும், பாபர் மசூதியை இடித்த வெறியர்களையும் நாம் இன்னும் நினைவு கூறக்கூடாது. ஏனெனில் அது மத, ஜாதீய வெறிகளை சிலரின் மனதில் விஷ எண்ணங்களையே தூண்டிக்கொண்டிருக்கும். அதை அணைக்கும் விதத்தில்தான் பாம்பு பார்ப்பன வர்ணனையை நான் எதிர்த்தேன். தலித்துகளில், ஜனாதிபதிகளும், முதல்வர்களும், விஞ்ஞானிகளும் இருப்பதுதான் நாம் அடைந்த சுதந்திரத்தின் பலன் என்று எழுதியும், பேசியும் வருபவன் நான். நான் எப்போதோ முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்கியில் ஒரு சில வரிகள் மதசார்பு பற்றி எழுதியதற்கு திரு வீரமணி அவர்கள் விடுதலையில் முதல் பக்கத்தில் 7 காலத்தலைப்பில் " பூணூல் திருமேநியாரின் ஒப்பாரி" என்று என்னை பியிதது உதறி இருந்தார். பார்பனர்கள் மாறினாலும் இவர்கள் மாறுவது இல்லை.
-----------------------------------------------------------------------------------------------------
Name:Ratna samyDate & Time:4/16/2015 9:50:19 AM
-----------------------------------------------------------------------------------------------------
திரு பாலகுமாரன் எழுத்துக்கு மரியாதை கொடுக்கவேண்டும். அவரை அவமானப்படுத்துவது நம்மை நாமே அவமானப்படுத்திக்கொள்வதாகும்.
-----------------------------------------------------------------------------------------------------
Name:sundar selvarajDate & Time:4/15/2015 12:33:30 PM
-----------------------------------------------------------------------------------------------------
திரு ப சி ராமசந்திரன் அவர்களே, எப்படி அந்த கருத்தை சொன்னவரை மூடன் என்று கூற உங்களுக்கு உரிமை உள்ளதோ, அதே உரிமை திரு சுரேஷ் அவர்களுக்கும் தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் மேற்கோள் காட்ட உண்டு. அதற்காக அவரின் ஆங்கில அறிவை கொச்சை படுத்துவது தான் உங்களின் உயர் ஜாதி நாகரிகமா? அது மட்டுமா. அதென்ன போகிற போக்கில் தலித்துக்கள் கூட சிரிப்பார்கள் என்ற வர்ணனை? இன்றைய உலகத்தில் உங்கள் பார்பனர்களை விட ஆங்கிலத்தில் புகுந்து விளையாடும் அளவு அறிவு படைத்தவர்கள் தலித்துக்களும், பிற ஜாதியினரும் என்பதை மறந்து விட வேண்டாம். அடுத்தவரின் ஆங்கில அறிவை நையாண்டி செய்யும் நீங்கள் மேலே பாலகுமாரன் அவர்கள் சொல்ல விழைகின்ற உட்கருத்தையே புரிந்து கொள்ளும் அறிவுடையவராக இருப்பதாக தெரியவில்லையே. ஆங்கிலத்தில் சொல்வார்கள், when there is no basis for an argument , simply abuse the plaintiff என்று, இது உங்கள் கூற்றிக்கு மிகவும் பொருந்தும். இந்த லட்சணத்தில் நீங்கள் ஒரு senior journalist என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. அடுத்தவரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் முதலில், ஊருக்கு உபதேசம் எல்லாம் பிறகு செய்யலாம்.
-----------------------------------------------------------------------------------------------------
Name:Pa.Si. Ramachandran, Sr.JournalistDate & Time:4/10/2015 10:59:40 AM
-----------------------------------------------------------------------------------------------------
பாலகுமாரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய தாயுமானவன் நாவல் என்னை கவர்ந்தது. நா.பா.வுக்கு பிறகு நான் விரும்பியவர்கள் சுஜாதாவும், பாலகுமாரனும்தான். எப்போதோ ஒரு மூடன் சொன்ன பார்பானையும் பாம்பையும் விஷயம் இப்போது அழிந்துவிட்டது. எத்தனையோ பார்ப்பன அதிகாரிகள் தன்கீழ் வேலை செய்யும் பார்ப்பானல்லாதவர்களை கை தூக்கி விட்டிருக்கிறார்கள். சுரேஷ் ஒரு IT என்று சொல்கிறார். ஆனால் அவர் எழுதிய ஆங்கிலத்தில் எவ்வளவு தவறுகள்? இவர் 20 ஆண்டுகள் IT யில் இருந்து என்ன பயன்? தலித்துகள் கூட இவர் ஆங்கிலம் பார்த்து சிரிப்பார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
Name:SureshDate & Time:4/7/2015 9:51:32 AM
-----------------------------------------------------------------------------------------------------
அந்தணரல்லாத தமிழ் மட்டுமே தெரிந்த இளைஞர்களோடு சினேகம் கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் வேகமாக அந்த சினேகத்தை மறுத்தார்கள். "பார்ப்பானை நம்பாதே' என்றார்கள் - Fact . in my 20 Yesr employment in IT Field .. I learned we can not truest bramil and Mallu. They have n't changed till now.
-----------------------------------------------------------------------------------------------------
Advertisement

No comments:

Post a Comment